(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வருமானம் பெற்றாலும் '0' வருமான வரி இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க


உங்களது ஆண்டு ஊதியம் 15 லட்சம் ரூபாயாக இருந்தாலும், முறையாக திட்டமிட்டு நீங்கள் முதலீடுகளை செய்தால் வருமான வரியே செலுத்த வேண்டியதில்லை தெரியுமா. அதற்கான வழிமுறைகளை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.


பொதுவாக ரூ.2.50 லட்சம் வரையிலான வருமானத்திற்கு நமக்கு வரி கிடையாது.எனவே ரூ.2.50 லட்சத்தை நமது மொத்த வருமானத்தில் இருந்து கழித்து கொள்ளலாம்.


Here is how you can reduce your tax to zero


இரண்டாவதாக வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி-இன் கீழ் ஒரு நபர் ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும். இதில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், தொழிலாளர் வைப்பு நிதி திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், வரி சேமிப்புக்கு உதவக்கூடிய நிலையான வைப்புத் தொகை திட்டங்கள, ஆயுள் காப்பீடு திட்டங்களுக்காக செலுத்தும் பிரீமியம் தொகைகள், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணங்கள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி ரூ.1.50 லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும.



ஊதியம் பெறுபவர்கள் அல்லது ஓய்வூதியம் பெறும் நபர்கள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையான கழிவு மூலம், அவர்களது வருமான வரிக்கு உட்பட்ட வருமானத்தில் ரூ.50,000 கழிவு பெறலாம். இதே போல பிரிவு 24 (பி)இன் கீழ் வீட்டு கடனுக்காக செலுத்தப்படும் வட்டிக்கு ஒரு ஆண்டில் ரூ. 2 லட்சம் வருமான வரி விலக்கு பெற முடியும்.


அதேபோல தேசிய பென்ஷன் திட்டத்தில் ஒரு நிதியாண்டில் நீங்கள் செய்யும் பங்களிப்புகளுக்கும் வருமான வரி சலுகை கிடைக்கிறது. பிரிவு 10(14)இல் விடுமுறை கால பயணங்களுக்கான அளவன்ஸ்க்கு வரிச்சலுகை பெறலாம், மருத்துவ காப்பீடுகளுக்கு செலுத்தப்படும் பிரீமியம் தொகைகள் அதாவது வரி செலுத்தும் நபருக்கு மற்றும் அவரது குழந்தைகள் மற்றும் அவரை சார்ந்திருக்கும் பெற்றோருக்கு செலுத்தப்படும் மருத்துவ காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகைகளை சுட்டிக்காட்டி பிரிவு 80 டி-இன் கீழ் வருமான வரிச் சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.


ஆண்டுக்கு ரூ.15 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் அடிப்படை வரிவிலக்கான ரூ.2.50 லட்சம் விலக்கு, 80சி பிரிவின் கீழ் ரூ.1.50 லட்சம் வரிவிலக்கு, நிலையான கழிவில் ரூ.50,000 வரிச் சலுகை, பிரிவு 24 பி-யில் ரூ.2 லட்சம் வரிச்சலுகை மற்றும் ஹெச்.ஆர்.ஏ-க்கான வரிச் சலுகை மற்றும் பிரிவு 80டி, பிரிவு 10 (14) ஆகியவற்றின் கீழ் வரி சலுகைகளை பெறலாம்.


இப்படி முறையாக திட்டமிட்டு வருமான வரி சட்டத்தின் பொருந்தக்கூடிய அனைத்து பிரிவுகளையும் பயன்படுத்தி வரி சலுகை பெற்றால் எளிதாக வரியை பூஜ்யம் என்ற நிலைக்கு கொண்டு வர முடியும்.


பழைய வருமான வரி தாக்கல் முறையை பின்பற்றுபவர்களுக்கே இது பொருந்தும், புதிய முறையில் வருமான வரி தாக்கல் செய்வோருக்கு இது பொருந்தாது.


 


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations