(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

Stock News: பங்குச் சந்தையில் வீழ்ச்சி - சென்செக்ஸ் 275 புள்ளிகள் சரிவு!

 

இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி நிலவுகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் இன்று (அக்.16) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 240.75 புள்ளிகள் சரிந்து 81,579.37 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 62.7 புள்ளிகள் சரிந்து புதிய உச்சமாக 24,994.65 என இருந்தது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச் சந்தை இறங்கு முகமாக இருப்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 274.74 புள்ளிகள் (0.34%) சரிந்து 81,545.38 ஆகவும், நிஃப்டி 87.35 புள்ளிகள் (0.35%) உயர்ந்து 24,970.00 ஆகவும் இருந்தது.



காரணம் என்ன? அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் நெகட்டிவாகவே நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவினாலும், சியோல் மற்றும் டோக்கியோ பங்குச் சந்தையில் கடும் சரிவு நிலவுகிறது. அத்துடன், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் தயக்கத்தின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையில் தற்போது வீழ்ச்சி நிலவுகிறது.

 ஏற்றம் காணும் பங்குகள்: 

ஹெச்டிஎஃப்சி பேங்க் பார்தி ஏர்டெல் ஏசியன் பெயின்ட்ஸ் எஸ்பிஐ இந்துஸ்தான் யூனிலீவர் 

இறங்கு முகம் காணும் பங்குகள்:

 பஜாஜ் ஃபின்சர்வ் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சன்பார்மா விப்ரோ ஐசிஐசிஐ பேங்க் டாடா ஸ்டீல் ஐடிசி 

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.07 ஆக இருந்தது.





Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations