(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

1 சவரனுக்கு ரூ. 400 அதிகரித்த தங்கம் விலை.. இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போலயே!

 


அக்டோபர் 16-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை இன்றைய தினம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,140 ஆகவும், அதேபோல் 24 தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,789 ஆகவும் உள்ளது.


கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: தமிழகத்தின் முன்னணி நகரங்களான சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் அதிகரித்து 7,140 ரூபாயை எட்டியுள்ளது. இதில் 91.67% தூய தங்கம் இருக்கும். 22 கேரட் தங்கம் தங்க நகைகள், நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் செய்யப் பயன்படுகிறது.


1 சவரன் 22 கேரட் தங்கம் 57,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்றைய தினம் மட்டும் 360 சவரனுக்கு அதிகரித்துள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 49 ரூபாய் அதிகரித்து 7,789 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 392 ரூபாய் அதிகரித்து 62,312 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. 24 கேரட் தூய்மையான தங்கமாகும். இது மிகவும் மென்மையானது. இதை வைத்து நகைகள் செய்ய முடியாது. பெரும்பாலும் தங்க நாணயங்கள், தங்க கட்டிகள் ஆகியவற்றை செய்ய முடியும். 22 கேரட் தங்கம் விலை 7,140 ரூபாயை எட்டியுள்ளது. இது நகைப் பிரிர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறி இருக்கிறது. ஏனெனில் பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு 6,500 ரூபாயாக இருந்த 22 கேரட் தங்கத்தின் விலை தற்போது 650 ரூபாய் வரை கிராமுக்கு அதிகரித்துள்ளத.



பண்டிகை காலம் நெருங்கி வருவதால் தங்க விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது, 7140 ரூபாயை நெருங்கிய தங்கம் விலையில் இன்றும் விலை குறைவு இருக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. " அதிரடி ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. 1 சவரன் ரூ.62,000-த்தை தாண்டியது.. 1 கிராம் விலை இதுதான்!" கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 1 ரூபாய் அதிகரித்து 103 ரூபாயை எட்டியுள்ளது. 1 கிலோ வெள்ளி 1,03,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.







Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations