(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

இ-பாஸ் முறைக்கு ஊட்டி, கொடைக்கானலில் கடும் எதிர்ப்பு இ-பாஸ் முறைக்கு ஊட்டி, கொடைக்கானலில் கடும் எதிர்ப்பு


 தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏராளமான மக்கள், சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது.


இந்த நிலையில், கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைபோல், ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு 'இ-பாஸ்' கட்டாயமாக்க சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை மே 7-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.



ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நடைமுறையால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். இ-பாஸ் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாற்றுவழி சாலைகளை அறிமுகப்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஊட்டி, கொடைக்கானலுக்கு வர ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் இ-பாஸ் நடைமுறையால் பாதிக்கப்படுவார்கள் என்றும் இ-பாஸ் நடைமுறைக்கு வந்தால் மீண்டும் கொரோனா காலத்துக்கு செல்லக்கூடிய நிலை ஏற்படும் எனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations