(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

NEET UG Admit Card: சுய உறுதிமொழிப் படிவத்தை நிரப்புவது எப்படி? இதோ உங்களுக்கு வழிகாட்டுகிறோம்!

 


NEET UG 2024 தேர்வில் வெற்றி பெற விரும்புவோர், சுய உறுதிமொழி படிவத்தை (SDF) நிரப்புவதற்கு மறந்துவிடாதீர்கள். இந்த படிவம், உங்கள் அனுமதி அட்டையுடன், தேர்வு நுழைவுக்கு முக்கியமானது.

04 May 2024 11:19 IST

author-image

Listen to this article

NEET UG 2024 தேர்வு எழுதச் செல்பவர்கள் சுய உறுதிமொழிப் படிவத்தை (SDF) நிரப்புவதற்கு மறந்துவிடாதீர்கள். இந்த படிவம், உங்கள் அனுமதி அட்டையுடன், தேர்வு நுழைவுக்கு முக்கியமானது. நீங்கள் கோவிட் அறிகுறியற்றவர் (COVID-19) மற்றும் சமீபத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கபடவில்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அதில் கையொப்பமிடுவது பரீட்சை விதிகளுக்கு உங்கள் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது.


எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வான NEET UG 2024 மே 5, 2024-ல் விரைவில் நெருங்கி வருகிறது. மேலும், மருத்துவ மாணவர்கள் தேர்வுத் தயாரிப்பில் ஆழ்ந்த கவனத்தில் இருக்கக்கூடும். தேர்வு மதிப்பெண்கள் மறுக்க முடியாத அளவுக்கு முக்கியமானவை என்றாலும், கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சம் உள்ளது - சுய-உறுதிமொழிப் படிவம் ஆகும். இது பார்ப்பதற்கு எளிமையான ஆவணம் ஒரு மென்மையான தேர்வு அனுபவத்தை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.


சுய உறுதிமொழிப் படிவம் என்றால் என்ன?


தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ) வெளியிட்ட நீட் யு.ஜி (NEET UG) அனுமதி அட்டை, சுய உறுதிமொழிப் படிவத்துடன் வருகிறது.


சுய உறுதிமொழிப் படிவம் இரண்டு முக்கிய காரணங்களுக்காக குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது:


*தேர்வு நாள் நுழைவு: சுய உறுதிமொழிப் படிவம் தேர்வு நாளில் அத்தியாவசிய ஆவணமாக உள்ளது. நீங்கள், உங்கள் அனுமதி அட்டையுடன், முறையாக நிரப்பப்பட்ட சுய உறுதிமொழிப் படிவத்தை தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவம் இல்லாமல், நீங்கள் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.


*தேர்வு நேர்மையைப் பேணுதல்: சுய உறுதிமொழிப் படிவம் தேர்வு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது. இந்த படிவத்தில் கையொப்பமிடுவதன் மூலம், அங்கீகரிக்கப்படாத பொருட்களைப் பயன்படுத்துவது அல்லது தேர்வின் போது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பது போன்ற எந்த நியாயமற்ற நடைமுறைகளிலும் நீங்கள் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.


சுய உறுதிமொழிப் படிவத்தில் என்ன தகவல்கள் உள்ளன?



சுய உறுதிமொழிப் படிவத்தின் முக்கியத்துவங்கள் ஆண்டுதோறும் சிறிது மாறுபடலாம். ஆனால், பொதுவாக, நீங்கள் பின்வருவனவற்றை அறிவிக்க வேண்டும்:


*கோவிட்-19 அறிகுறிகள் இல்லை: பரீட்சை நாளில் காய்ச்சல், இருமல் அல்லது சளி போன்ற எந்த கோவிட்-19 அறிகுறிகளையும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.


*கோவிட்-19 பாதிப்பு இல்லை: சோதனையில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நீங்கள் சமீபத்தில் தொடர்பில் இருந்தீர்களா என்பதை அறிவிக்கும்படி கேட்கப்படுகிறது.


*தேர்வு விதிகளைப் பின்பற்றுதல்: தேசியத் தேர்வு முகமையால் (என்.டி.ஏ) கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள அனைத்து தேர்வு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும் நீங்கள் ஒப்புக்கொண்டு, கடைப்பிடிக்க ஒப்புக்கொள்ளும் படிவத்தில் ஒரு அறிக்கை இருக்கும்.


சுய உறுதிமொழிப் படிவத்தை எப்படி நிரப்புவது?


சுய உறுதிமொழிப் படிவம் பொதுவாக உங்கள் அனுமதி அட்டையுடன் என்.டி.ஏ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படலாம். அதை எப்படி நிரப்புவது என்பதற்கான படிப்படியான வழிகாட்டியை இங்கே தருகிறோம்.


*படிவத்தைப் பதிவிறக்கம் செய்யுங்கள்: என்.டி.ஏ இணையதளத்திற்குச் சென்று நீட் யு.ஜி (NEET UG) அனுமதி அட்டைக்கான பதிவிறக்க இணைப்பைக் கண்டறியவும். சுய உறுதிமொழிப் படிவம் பொதுவாக அட்மிட் கார்டுடன் இருக்கும்.


*வழிமுறைகளை மதிப்பாய்வு செய்யுங்கள். பூர்த்தி செய்வது தொடர்பாக படிவத்திலோ அல்லது இணையதளத்திலோ கொடுக்கப்பட்டுள்ள எந்த வழிமுறைகளையும் கவனமாக படிக்க வேண்டும்.


*விவரங்களை நிரப்புங்கள்: கருப்பு மை பேனாவைப் பயன்படுத்தி, உங்கள் பெயர், ரோல் எண் மற்றும் தேர்வு மைய விவரங்கள் உட்பட தேவையான அனைத்து தகவல்களையும் துல்லியமாக நிரப்புங்கள்.


*கோவிட் அறிகுறிகளைச் சரிபார்க்க வேண்டும்: கோவிட்-19 அறிகுறிகள் மற்றும் சமீபத்திய அறிகுறி வெளிப்பாடு தொடர்பான அறிவிப்புகளைப் படிக்க வேண்டும். உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், தேர்வு நாளுக்கு முன் மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். 


*கையொப்பம் மற்றும் தேதி: குறிப்பிடப்பட்ட பிரிவில் படிவத்தில் கையொப்பமிட்டு தேதியிட்டதை உறுதிசெய்யுங்கள். 


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations