(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

நீங்க NPS திட்டத்தில் முதலீடு செய்றீங்களா..? முக்கியமான மாற்றம் நடந்திருக்கு.. தெரிஞ்சுக்கோங்க..!


 


சென்னை: நேஷனல் பென்ஷன் ஸ்கீம் என்று சொல்லப்படுகிற தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வு காலத்தில், ஒருவருக்கு தேவையான வருமானத்தை ஏற்படுத்தித் தரும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தினை பயன்படுத்தி ஒருவர் ஓய்வு பெறும் காலத்தில், பாதுகாப்பான வருமானத்தை பெற முடியும். பணியாளர்களாக இருக்கும் நபர்கள் தங்களது ஓய்வு காலங்களில் வருமானம் நின்று போகும் நாட்களை திறம்பட கழிப்பதற்கு இந்தத் திட்டம் உதவியானதாக இருக்கும்.


இந்தத் திட்டம் முதிர்ச்சி அடையும் போது, இதன் மூலம் பெறப்படும் முதிர்வு தொகையானது, வரையறுக்கப்பட்ட வருமானமாக இருக்கும் என்று நம்மால் கூற முடியாது. ஏனெனில், இந்த கார்பஸ் முழுவதுமாக பங்குகள் மற்றும் பத்திரங்களின் செயல் திறனை பொறுத்தது.



 


Know the changes implemented in NPS scheme

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) படி ஒரு நிலையான வருமானத்தை உங்கள் ஓய்வு காலத்தில் பெறவேண்டும் என்று நினைத்தால், அதற்கு நிலையான முதலீடு இருக்க வேண்டும். உங்கள் முதலீடு மற்றும் முதலீட்டின் கால அளவைப் பொறுத்தே ஓய்வுக்குப் பின் உங்கள் வருமானம் தீர்மானிக்கப்படுகிறது.


நீங்கள் எவ்வளவு அதிகமாக மற்றும் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக சேமிக்கிறீர்கள், என்று நிபுணர்கள் கூறுகின்றனர். NPSஇல் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரிச் சட்டத்தின் 80CCE பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குகளைப் பெறலாம். கூடுதலாக, 1.5 லட்சம் வரம்பிற்கு மேல் பிரிவு 80CCD(1B) இன் கீழ் ரூ. 50,000 கூடுதல் வரி விலக்கு பெற முடியும்.


2024 ஆம் ஆண்டில் என் பி எஸ் திட்டத்தில் ஏற்பட்ட சில முக்கியமான மாற்றங்களைப் பற்றிப் பார்ப்போம்.


1. என்பிஎஸ் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் 60 வயதை அடைந்தால், தங்களுடைய சேமிப்பை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். ஆனால் சேமித்த மொத்த தொகை ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் போது, அதில் 40 சதவீதத்தை திரும்பவும் முதலீடு செய்ய வேண்டும். அதாவது வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.


மீதமுள்ள 60 சதவீத தொகையை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதுபோன்ற முதலீடு செய்யப்படும் தொகைக்கு வரி விதிக்கப்படாது. இருப்பினும் இந்தத் திட்டத்திலிருந்து பெறப்பட்ட வருமானம் தனிநபரின் வருமானவரியைக் கருத்தில் கொண்டு வரி விதிக்கப்படலாம்.


2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கம் 40% பணத்தை மட்டுமே வரி விலக்காக பெற அனுமதித்தது. மீதமுள்ள 20 சதவீதத்திற்கு வரிவிதித்தது. இருப்பினும் 2020இல் நடந்த யூனியன் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை 60 சதவீதமாக உயர்த்தியது.


2. பொதுவாக என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஆக்டிவ் மற்றும் ஆட்டோ. ஆக்டிவ் விருப்பத்தின் கீழ் முதலீடு செய்யும் போது உங்களுடைய ஃபண்ட் மேனேஜரை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் உங்களுடைய பணம் எவ்வளவு செல்கிறது என்பதை நீங்கள் கண்காணிக்க முடியும். ஆட்டோ என்பது ஒருவருக்கு என்பிஎஸ் திட்டம் புதிது எனும் பட்சத்தில், அவருக்கு எந்த விவரங்களும் தெரியாமல் இருந்தால், அவர்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஆட்டோ அசைன் செய்யப்படும்.


3. என்பிஎஸ் திட்டத்தில் ஆக்டிவ் விருப்பத்தின் கீழ் உள்ள நபர்கள் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 75 சதவீதம் வரை முதலீடு செய்ய முடியும். அக்டோபர் 2022க்கு முன் இது 50 சதவீதமாக இருந்தது.


4. 2023இல் PFRDA, SLW என்று சொல்லப்படுகிற Systematic Lumpsum Withdrawal என்னும் முறையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் 60 வயதை பூர்த்தி செய்தவுடன் ஒருவர் தங்களது முதலீட்டு தொகையை எளிதாகத் திரும்பப் பெற முடியும். ஆனால் முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது.


More From GoodReturns

ரூ.2 லட்சத்தை எட்டப் போகிறதா தங்கத்தின் விலை.. நிபுணர்கள் சொல்வது என்ன



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations