(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

TNEA 2024: இன்ஜினியரிங் கவுன்சலிங்; எம்.ஐ.டி கல்லூரி கட் ஆஃப் நிலவரம் என்ன?


 


தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024: எம்.ஐ.டி கேம்பஸில் கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரம் என்ன? இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன?


தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரியில் இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.


தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 6 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் தொடங்கும்.


இந்தநிலையில் தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரியாக திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியான எம்.ஐ.டி கேம்பஸ் எனப்படும், குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். கட் ஆஃப் உள்ளிட்ட தகவல்களை கல்வி ஆலோசகர் தினேஷ் பிரபு யூடியூப் வீடியோவில் வழங்கியுள்ளார்.


அதன்படி, எம்.ஐ.டி கல்லூரி என்.ஐ.ஆர்.எஃப் ரேங்கிங்கில் 13 ஆவது இடத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் வேலைவாய்ப்பு சிறப்பாக உள்ளது. 


பாடப்பிரிவுகளும் கடந்த ஆண்டு கட் ஆஃப் நிலவரமும்


ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் – 195


ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் – 198


ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் – 190


கம்ப்யூட்டர் சயின்ஸ் (எஸ்.எஸ்) – 198.5



கம்ப்யூட்டர் சயின்ஸ் – 199


இ.சி.இ – 198.5


இ.ஐ.இ – 195.5


இ.சி.இ (எஸ்.எஸ்) – 197


ஐ.டி (எஸ்.எஸ்) – 197.5


புரொடொக்சன் இன்ஜினியரிங் – 185.5


ரோபாட்டிக்ஸ் (எஸ்.எஸ்) – 195.5


ரப்பர் அண்ட் பிளாஸ்டிக்ஸ் – 177.5


இடஒதுக்கீட்டு பிரிவுகளுக்கு பொதுப் பிரிவை விட, பிரிவுக்கு ஏற்ப 4 முதல் 10 வரை கட் ஆஃப் குறைவாக இருந்துள்ளது.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations