Advertisement

Responsive Advertisement

40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இனி லைசென்ஸ் பெற இந்த சான்று கட்டாயம் தேவை! எப்படி வாங்கனும் தெரியுமா? driving license medical certificate


 இந்நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தச் சட்டத்தின் படி இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்தாலோ அல்லது பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்தாலோ, அவர்கள் கட்டாயம் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடமிருந்து மருத்துவச் சான்றைப் பெற்று அதையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.


இந்நிலையில் ஆங்காங்கே சில பகுதிகளில் புதிய ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நபர்கள் போலியான சான்றிதழை பதிவேற்றம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது தமிழக போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. விரைவில் இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு இந்த போலி ஆவணங்கள் பதிவேற்றுவதை தடுக்க புதிய வழிமுறை ஒன்றை அறிவித்துள்ளது.


driving license medical certificate

அதன்படி இனி சாரதி மென்பொருள் வழியாக ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பம் செய்யும்போது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு சான்று பெற்று மருத்துவம் செய்து வரும் மருத்துவரிடம் இருந்து பெறப்பட்ட சான்றுகள் மட்டுமே இனி பதிவேற்றம் செய்யும் வகையில் சில அப்டேட்களை செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் தங்கள் மருத்துவ கவுன்சிலிங் பதிவு எண்ணை ஒருமுறை சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.




அதன் பிறகு அந்த ஆவணங்களை எல்லாம் அரசு சரிபார்த்த பின் அவர் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தகுதியான மருத்துவச் சான்றை வழங்கும் மருத்துவர் என அங்கீகரிக்கப்படும். குறிப்பிட்ட அந்த மருத்துவர்கள் வழங்கும் சான்று மட்டுமே இனி செல்லத்தக்கதாக கருதப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.


driving license medical certificate

இப்படியாக சாரதி மென்பொருளில் ஒருமுறை பதிவு பெற்று அங்கீகாரம் பெற்ற மருத்துவர் இனி ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எலெக்ட்ரானிக் முறையிலேயே சான்று வழங்க முடியும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன்படி இனி போலி மருத்துவர்கள் தனியாக வழங்கும் சான்றினை ஓட்டுனர் உரிமத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.



அதன்படி இனி ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் விண்ணப்பம் செய்த பின்பு மருத்துவச் சான்றிணை பெற உரிய மருத்துவரை அணுகி தங்கள் விண்ணப்ப பதிவெண்னை கொடுத்து மருத்துவ பரிசோதனை செய்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மருத்துவரையே நேரடியாக அவரது ரிப்போர்ட்டை ஆன்லைன் மூலம் அங்கீகரிக்க கோர வேண்டும்.


இப்படியாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் மருத்துவரின் அங்கீகாரம் பெற்ற பின்பே அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. புதிதாக வந்துள்ள லைசென்ஸ் பெரும் வழிமுறைகளின் பின்பற்றி இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் பட்டியல் சாரதி போர்டலில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வந்த நிலையில் அந்த முறைகேடுகளை எல்லாம் குறைப்பதற்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் இது முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இனி லைசென்ஸ் பெறுவதற்கு மருத்துவச் சான்றை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை நிச்சயம் வரவேற்கலாம்.


More From DriveSpark

சுங்க கட்டணம் யார்கிட்ட கேட்குற? ஜேசிபி டிரைவரிடம் மட்டும் பிரச்சனை வெச்சிக்க கூடாது!! டோல் பூத் க்ளோஸ்...



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations