Advertisement

Responsive Advertisement

ரூ.555 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் பாலிசி.. சூப்பரான காப்பீட்டை வழங்கும் IPPB!


 சென்னை: திடீர் விபத்துகள் யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பாதிக்கலாம். எனவே அத்தகைய சூழ்நிலைகளில் நிதி பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது அவசியமான ஒன்று. இதனை கருத்தில் கொண்டு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (IPPB) மலிவான பிரீமியத்தில் விபத்து காப்பீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.



இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க், ஹெல்த் பிளஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஹெல்த் பிளஸ் ஆகிய இரண்டு தனிநபர் விபத்துக் காப்பீடுகளை வழங்குகிறது. அனைத்து விபத்துக் காப்பீடுகளுக்கும் பாலிசி காலம் ஒரு வருடம்.


Insurance  Policy



இந்த விபத்துக் காப்பீடுகளைப் பெற யார் பதிவு செய்யலாம்?: 18 வயது முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் ஹெல்த் பிளஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஹெல்த் பிளஸ் விபத்துக் காப்பீடுகளைப் பெற முடியும்.



ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 1 திட்டத்தின் பலன்கள்: இந்த ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 1 திட்டத்தின் காப்பீட்டு தொகை ரூ. 5 லட்சம். விபத்து காரணமாக காப்பீட்டைப் பெறுபவர் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனமுற்றாலோ, காப்பீடு செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.


மேலும், அவர்களுடைய குழந்தைகள் திருமணத்திற்கு ரூ.50,000 வரையிலும், விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி ரூ.25,000 வரையிலும் கிடைக்கும். ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 1-இன் வருடாந்திர பிரீமியம் ரூ.355 + ஜிஎஸ்டி.



ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 2 திட்டத்தின் பலன்கள்: இந்த ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 2 திட்டத்தின் காப்பீட்டு தொகை ரூ. 10 லட்சம். விபத்து காரணமாக காப்பீட்டைப் பெறுபவர் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனமுற்றாலோ, காப்பீடு செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு 100 சதவீத தொகை வழங்கப்படும். ஆதாவது ரூ.10 லட்சம் காப்பீட்டை பெற்ற நபரின் குடும்பத்திற்கு வழங்கப்படும். குழந்தையின் திருமணத்திற்கு ரூ.50,000 வரை கவரேஜ் கிடைக்கும். விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி ரூ.25,000 வரையிலும் கிடைக்கும்.



இறுதிச் சடங்கு செலவுகளுக்கு ரூ.5,000 வரை கோர முடியும். மேலும், குழந்தைகள் கல்விக்காக ரூ.50,000 வரை கிடைக்கும். ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 2-இன் வருடாந்திர பிரீமியம் ரூ.555 + ஜிஎஸ்டி.



ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 3 திட்டத்தின் பலன்கள்: இந்த ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 3 திட்டத்தின் காப்பீட்டு தொகை ரூ. 15 லட்சம். விபத்து காரணமாக காப்பீட்டைப் பெறுபவர் மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனமுற்றாலோ, காப்பீடு செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு 100 சதவீத தொகை வழங்கப்படும். குழந்தையின் திருமணத்திற்கு ரூ.1,00,000 வரை கவரேஜ் கிடைக்கும். விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டால், காப்பீட்டு நிறுவனத்தின் விதிமுறைகளின்படி ரூ.25,000 வரையிலும் கிடைக்கும்.



ஹெல்த் பிளஸ் ஆப்ஷன் 3-இன் வருடாந்திர பிரீமியம் வரிகள் உட்பட ரூ.755 ஆக இருக்கும்.


எக்ஸ்பிரஸ் ஹெல்த் திட்டத்தின் கீழ், நீங்கள் ஆலோசனைகள், வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற நன்மைகளையும் பெறுவீர்கள். ஹெல்த் பிளஸ் விருப்பத்தில் மற்ற எல்லா நன்மைகளும் இருக்கும். பாலிசிகள் எதையும் வாங்கும் முன் அனைத்து அம்சங்களையும் கவனமாக படிக்கவும்.



இந்த விபத்துக் காப்பீடுகளை நீங்கள் எங்கிருந்து வாங்கலாம்?: இந்தப் பாலிசியைப் பெற அருகில் உள்ள இந்திய தபால் நிலையத்தைப் பார்வையிடவும்.


More From GoodReturns

 உங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறதா? இது கூட காரணமா இருக்கலாம்!


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations