Advertisement

Responsive Advertisement

SBI வங்கியில் ரூ.80,000 FD முதலீட்டுக்கு எவ்வளவு வட்டி தெரியுமா.. மூத்த குடிமக்களுக்கு அல்வா மாதிரி!


 ஓய்வு பெறும் வயதை நெருங்கும்போது, பலருக்கும் இருக்கும் பெரும் பயம் ஓய்வூதிய நாட்களை எவ்வாறு கழிப்பது? என்பது தான். பெரும்பாலானோர் தங்கள் முதுமை காலச் செலவுகளுக்கு பிறரிடம் பணம் கேட்காமல் சுயமாக வாழ விரும்புகிறார்கள். வயதான காலத்தில் பல மூத்த குடிமக்கள் தங்கள் பணத்தை FD திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கின்றனர். அதற்கு தகுந்தாற் போல் வங்கிகளும் அதிக வட்டி விகிதங்களில் FD திட்டங்களை வழங்குகின்றன. அந்த வகையில் SBI FD திட்டத்தில் முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.



பொதுவாகவே பொது வாடிக்கையாளர்களை விட வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை வழங்குகிறது. உழைக்க பலம் குறைந்து இருக்கும் மூத்த குடிமக்களும் நல்ல வருமானத்தை பெறுவதற்காக இத்தகைய திட்டங்களை பல வங்கிகளும் அறிமுகம் செய்கிறது.




மூத்த குடிமக்கள் FD திட்டம் மூலம் பெறும் சில நன்மைகள்: வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு பொது வாடிக்கையாளர்களை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. மேலும் 5 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்ட FD திட்டங்களில், ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரி இல்லை.



ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வழங்கும் மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதங்கள்:


400 நாட்கள் கொண்ட அம்ரித் கலாஷ் FD திட்டத்தில், SBI பேங்க் மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 7.30 சதவீதம், 7.25 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் ஆகும்.



1 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு FDகளில், நீங்கள் ரூ. 80,000, ரூ. 1,60,000, ரூ. 2,40,000 மற்றும் ரூ. 3,20,000 முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி பெறுவீர்கள் என்பதைப் பார்ப்போம்.



ரூ.80,000 தொகையை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 1 வருடத்திற்கு 80,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.86,002 ரூபாய் கிடைக்கும். 7.30 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 6,002 வட்டி வழங்கப்படும்.


ரூ.1,60,000 தொகையை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 1 வருடத்திற்கு 1,60,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.1,72,004 ரூபாய் கிடைக்கும். 7.30 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.12,004 வட்டி வழங்கப்படும்.



ரூ.2,40,000 தொகையை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 1 வருடத்திற்கு 2,40,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.2,58,005 ரூபாய் கிடைக்கும். 7.30 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.18,005 வட்டி வழங்கப்படும்.


ரூ. 3,20,000 தொகையை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 1 வருடத்திற்கு 3,20,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.3,44,007 ரூபாய் கிடைக்கும். 7.30 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.24,007 வட்டி வழங்கப்படும்.


ரூ.80,000 தொகையை 3 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 80,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.99,244 ரூபாய் கிடைக்கும். 7.25 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.19,244 வட்டி வழங்கப்படும்.



ரூ.1,60,000 தொகையை 3 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 1,60,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.1,98,488 ரூபாய் கிடைக்கும். 7.25 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.38,488 வட்டி வழங்கப்படும்.


ரூ.2,40,000 தொகையை 3 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 2,40,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.2,97,731 ரூபாய் கிடைக்கும். 7.25 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.57,731 வட்டி வழங்கப்படும்.



ரூ. 3,20,000 தொகையை 3 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 3,20,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.3,96,975 ரூபாய் கிடைக்கும். 7.25 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.76,975 வட்டி வழங்கப்படும்.


ரூ.80,000 தொகையை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 80,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.1,15,996 ரூபாய் கிடைக்கும். 7.50 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.35,996 வட்டி வழங்கப்படும்.



ரூ.1,60,000 தொகையை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 1,60,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.2,31,992 ரூபாய் கிடைக்கும். 7.50 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.71,992 வட்டி வழங்கப்படும்.


ரூ.2,40,000 தொகையை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 2,40,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ.3,47,988 ரூபாய் கிடைக்கும். 7.50 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.1,07,988 வட்டி வழங்கப்படும்.


ரூ. 3,20,000 தொகையை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 3,20,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூ. 4,63,983 ரூபாய் கிடைக்கும். 7.50 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.1,43,983 வட்டி வழங்கப்படும்.


More From GoodReturns

SBI வங்கி தலைவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. அப்போ 8000 பேருக்கு வேலை நிச்சயமா..!!


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations