Advertisement

Responsive Advertisement

புதிய சேமிப்புத் திட்டத்தை வெளியிடும் ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஹவுஸ்.. இதில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?


 

ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸ் ஜூன் 12 அன்று ஆதித்யா பிர்லா சன் லைஃப் குவாண்ட் மியூச்சுவல் ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபண்டில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம், என்ன வகை ஃபண்ட் என்பதைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.

ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் குவாண்ட்-அடிப்படையிலான முதலீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து, திறந்தநிலை ஈக்விட்டி கருப்பொருள் நிதித் திட்டமான ஆதித்யா பிர்லா சன் லைஃப் குவாண்ட் ஃபண்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

NFO Alert.

Aditya Birla Sun Life Mutual Fund - NFO alert



இந்தத் திட்டம் ஜூன் 10, 2024 அன்று பொதுச் சந்தாவிற்காக திறக்கப்பட்டுள்ளது. ஜூன் 24, 2024 அன்று நிறைவடையும். ஒதுக்கீடு செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் இந்தத் திட்டம் தொடர்ச்சியான விற்பனை மற்றும் மறு வாங்குதலுக்காக மீண்டும் திறக்கப்படும்.


இந்த ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?



இன்றுள்ள பங்குச் சந்தை ஏற்ற,இறக்கங்கள் கணிக்க முடியாத நிலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் அதிக குழப்பங்களுக்கு ஆளாகி உள்ளனர். அதனால் திடீர் இழப்புகளை சமாளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டதுதான் இந்த ஈக்விட்டி சார்ந்த ஃபண்ட் என ஃபண்ட் ஹவுஸின் ஈக்விட்டி ஹெட் மற்றும் சிஐஓ ஹரீஸ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.



இந்த திட்டம் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. ஈக்விட்டி சாந்த முதலீடுகளில் முதல் 40%டூ 50% ஈக்விட்டி சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஃபண்டில் முதலீடு செய்யத் தேவையான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும். அதே நீங்கள் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்ய நினைத்தால் அதற்கான குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் எக்ஸிட் கட்டணம் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சம்.


திட்டத்தின் செயல்திறன் நிஃப்டி 200 டிஆர்ஐயின் செயல்திறனுடன் இருக்கும். அதாவது NIFTY 200 இன்டெக்ஸ் பெரிய மற்றும் நடுத்தர சந்தை முதலீட்டு நிறுவனங்களின் நடத்தை மற்றும் செயல்திறனை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. NIFTY 200 ஆனது NIFTY 100 மற்றும் NIFTY Full Midcap 100 குறியீட்டின் ஒரு பகுதியை உருவாக்கும் அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கியது.

Mutual Funds-ல் முதலீடு செய்வது எப்படி? யார் stock market-ல் முதலீடு செய்யலாம்...


Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


எகனாமிக் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் Share Market சமீபத்திய Business News மற்றும் பிரேக்கிங் செய்திகளைப் படிக்கவும்

நா. லோகநாயகி கட்டுரையாளரை பற்றி

நா. லோகநாயகி



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations