Advertisement

Responsive Advertisement

பர்சனல் லோன் ஆன்லைனில் வாங்க போறீங்களா? இதையெல்லாம் கண்டிப்பா நோட் பண்ணுங்க!


 சென்னை: தனிநபர் கடன் என்று சொல்லப்படுகிற பர்சனல் லோன் பெறுவது, இதற்கு முன்பு ஒரு பெரிய செயல்முறையாக இருந்தது. ஏனெனில் எந்த வங்கியில் குறைந்த வட்டி விகிதங்களில் கடன் வழங்கப்படுகிறது என்று தேடி அலைந்து, பிறகு தேவையான ஆவணங்களைக் கொடுத்து, அதன் பிறகே பர்சனல் லோன் பெற வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை. ஆன்லைன் முறையில் பர்சனல் லோன் விண்ணப்பிக்கும் செயல்முறை மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது.


ஆனால் தற்போது பல போலியான ஆப்-களை கொண்டும் பர்சனல் லோன் தருவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி லோன்களை கொடுத்து, அதன் பின்னர் அவர்களுடைய புகைப்படத்தையே வைத்து மார்ஃபிங் செய்து அவர்களுடைய உறவினர்களுக்கு அனுப்பி மோசடி செய்கின்றனர்.



loan  interest

இதன் விளைவாக கடன் வாங்கிய நபர் தற்கொலை செய்து கொண்டு இறக்கும் அளவிற்கு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் போலியான ஆப்களை அரசாங்கம் முடக்கியது. ஆனால் இன்னும் சிலர் தெரியாமல் இது போன்ற ஆப்-களில் கடன்களைப் பெற்று அதிக வட்டி செலுத்தி ஏமாந்து வருகின்றனர். ஆன்லைனில் பர்சனல் லோன் பெற வேண்டும் என்றால், சில விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் விண்ணப்பிக்க வேண்டும்.



கடன் வழங்குபவர்களை ஆராய்தல்: நீங்கள் பர்சனல் லோன் பெற வேண்டும் என்று நினைத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தற்போது கூகுள் பே போன்ற ஆன்லைன் டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் வழியாகவும் லோன்கள் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் லோன் பெறும்போது அவை அங்கீகரிக்கப்பட்ட செயலியா என்பதைப் பார்த்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.



தகுதி: அங்கீகரிக்கப்பட்ட செயலியா என்பதை சரி பார்த்த பிறகு, உங்களுடைய சுயவிவரங்களை சரி பார்க்க வேண்டும், அதற்கு முதலில் உங்களுடைய சிபில் ஸ்கோர் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் உங்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும்.


ஆவணங்கள் : ஒரு தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது,அடையாளச் சான்று, முகவரிச் சான்று, பே ஸ்லிப் அல்லது வங்கி அறிக்கைகள் மற்றும் ஐடிஆர் (வருமான வரிக் கணக்குகள்) அல்லது வருமானச் சான்றுகள் உங்களுக்கு தேவைப்படும். இந்த ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.



கடன் தொகை மற்றும் திருப்பிச் செலுத்தும் காலம்: நீங்கள் எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை பற்றி தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் பட்ஜெட்டை பொறுத்து திருப்பி செலுத்தும் காலத்தை தேர்வு செய்யலாம்.


ஆன்லைன் விண்ணப்பம்: அடுத்த கட்டமாக ஆன்லைனில் கடன் பெற விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு விட்டால் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் உங்களுக்கு கடன் கிடைக்கும்.


சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல்: கடனுக்கான விண்ணப்பத்தை நிரப்பி ஆன்லைனில் சமர்ப்பித்தவுடன், கடன் வழங்குபவர் உங்கள் தகவல்களை சரிபார்த்து, பின் உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு விட்டால், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கடன் வழங்கப்படும்.



கடன் ஒப்பந்தத்தை ஆராய்ந்து கையொப்பமிடுங்கள்: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உடைய பத்திரத்தில் டிஜிட்டல் முறையில் நீங்கள் கையொப்பமிடுவதற்கு முன், வட்டி விகிதங்கள், கட்டணங்கள், திருப்பிச் செலுத்தும் அட்டவணை மற்றும் முன்கூட்டியே செலுத்தும் அபராதங்கள் போன்ற விவரங்களை சரிபார்க்க வேண்டும்.


கடன் தொகை: நீங்கள் அதை ஒப்புக்கொண்டு,மற்ற செயல்முறைகளை வெற்றிகரமாக முடித்தவுடன், கடனளிப்பவர் கூறிய நேரத்தை பொறுத்து, ஒரு சில நாட்களில் உங்கள் வங்கி கணக்கிற்கு கடன் தொகை வந்துவிடும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations