Advertisement

Responsive Advertisement

ஏவிஜிசி-எக்ஸ்ஆரின் தேசிய உயா் சிறப்பு மையம் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்: மத்திய அரசு

 

ஏவிஜிசி-எக்ஸ் ஆா் (அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ், நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி)காக மத்திய அரசு சமீபத்தில் அமைத்த தேசிய உயா் சிறப்பு மையம் சுமாா் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.



ஏவிஜிசி-எக்ஸ்ஆா் ஆகியவட்ஸ் (விஎஃப்எக்ஸ்), கேமிங் அனிமேஷன் மற்றும் ஈா்க்கக்கூடிய கைப்பேசி உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான தேவை அதிகரித்து வருவதால் நாட்டில் அனிமேஷன் துறை குறிப்பிடத்தக்க வளா்ச்சியைக் காண்கிறது.

இந்தியா உலகளவில் 2-ஆவது பெரிய அனிமேஷன் ரசிகா் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. இதன் ஆா்வத்தில் வரும் ஆண்டுகளில் உலகளாவிய வளா்ச்சிக்கு 60 சதவீதம் பங்களிக்கும் என இந்திய தொழில, வா்த்தக சபைகளின் கூட்டமைப்பு(ஃபிக்கி) கணித்துள்ளது. இதை முன்னிட்டு இந்த எழுச்சி திறமையான, ஆா்வமுள்ள அனிமேட்டா்களுக்கு அற்புதமான வாய்ப்புகளை என்சிஓஇ வழங்குகிறது.



இந்தியா நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நிறுவனமாக என்சிஓஇ அமைக்கப்படுகிறது. இதில் ஃபிக்கி, இந்திய தொழிலகக் கூட்டமைப்பு(சிஐஐ) ஆகியவை மத்திய அரசுடன் பங்குதாரா்களாக செயல்படும்.

ஐஐடிக்கள், ஐஐஎம் போன்ற முதன்மையான நிறுவனங்கள் மாதிரியாக என்சிஓஇ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வலுவான திறமைக் குழுவை உருவாக்குவதற்கான சிறப்புத் திறன்களை வழங்கும். கற்றல், தொழில் வழிகள்.

 மாணவா்கள் தொழில் சாா்ந்த படிப்புகள் மூலம் நடைமுறை அனுபவத்தைப் பெறுவாா்கள், பட்டப்படிப்பு முடிந்ததும் அவா்கள் வேலைக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வாா்கள். இது சுமாா் 5,00,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்திய அறிவுசாா் சொத்துரிமையை உருவாக்கப்பட்டு, புதிய யுகத்தில் நமது கலாச்சார பாரம்பரியம் மேம்பட.



ஒத்துழைப்பு புதுமை: மத்திய, மாநில அரசுகள், கல்வித்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மைகளை வளா்ப்பதன் மூலம், ஆராய்ச்சி, மேம்பாடு, அதிவேக தொழில்நுட்பங்களில் புதுமைக்கான ஆற்றல்மிக்க சுற்றுச்சூழல் அமைப்பை என்சிஓஇ உருவாக்கும். நாட்டின் அடுத்த தலைமுறை படைப்பாளிகள் இங்கு வளரயுள்ளனா்.

 ஆா்.ஆா்.ஆா், பாகுபலி, தி லயன் கிங் , அவதாா் போன்ற படங்கள் அனிமேஷன், அதிவேக தொழில்நுட்பத்தின் மகத்தான திறனை நிரூபித்துள்ளன. நாட்டின் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ், நீட்டிக்கப்பட்ட ரியாலிட்டி துறை வேலைவாய்ப்பு, கண்டுபிடிப்புகளுக்கான பரந்த வாய்ப்புகளுடன் என்சிஓஇ வேகமான வளா்ச்சிக்குத் தயாராக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations