(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

கல்லூரி படிப்ப முடிச்சிட்டு வேலை தேடுறீங்களா? இந்த துறைகள்ல அதிக வேலைவாய்ப்பு இருக்குதாம்..!


கல்லூரி படிப்பை முடித்தவர்கள் வேலை தேட தொடங்கும் காலம் இது. இதனையொட்டி பிரபல லிங்குடின் தளம் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.



தொழில் ரீதியாக தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் வேலை வாய்ப்புகளை பெறுவதற்கும் உதவக்கூடிய ஒரு தளம் தான் லிங்குடின். கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் இந்த தளத்தில் போடப்பட்ட வேலைவாய்ப்புகள் மற்றும் அதன் மூலம் வேலை பெற்றவர்கள் உள்ளிட்ட விவரங்களின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


linkedin  jobs  job trend  fresher

அண்மையில் பட்டப்படிப்பை முடித்த ஃபிரஸ்ஸர்களுக்கு ஹைபிரிட் வகையிலான வேலைவாய்ப்புகள் 52% அதிகரித்துள்ளதாக அதில் கூறியுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் நெகிழ்வு தன்மையுடன் கூடிய பணிவாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேரடியாக அலுவலகத்திற்கு சென்று செய்யக்கூடிய ஆன்-சைட் பொசிஷன் வேலைகள் 15% குறைந்துள்ளது என சுட்டிக்காட்டி உள்ளது. அதே வேளையில் ஹைபிரிட் எனப்படும் குறிப்பிட்ட நாட்கள் அலுவலகம் குறிப்பிட்ட நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது என்ற நடைமுறையிலான வேலை வாய்ப்புகள் 52% அதிகரித்துள்ளது எனக் கூறியுள்ளது .


அண்மையில் கல்லூரி படிப்பை முடிந்த பிரஷர்களுக்கு இதுபோன்ற ஹைபிரிட் வேலை வாய்ப்புகள் கிடைப்பதாக லிங்குடின் தனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியான வேலைவாய்ப்பு தொடர்பாக போஸ்டுகளை ஆய்வு செய்து லிங்குடின் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.


ரியல் எஸ்டேட், வாடிக்கையாளர் சேவைகள், எண்ணெய், எரிவாயு மற்றும் சுரங்கப் பணிகள் மற்றும் உபகரணங்களை வாடகைக்கு வழங்க கூடிய சேவை நிறுவனங்கள் உள்ளிட்டவை தான் அதிக அளவில் பிரஷர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளன என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.



இளங்கலை படிப்பினை முடித்தவர்கள் சாப்ட்வேர் இன்ஜினியர், சிஸ்டம் இன்ஜினியர் மற்றும் ப்ரோகிராமிங் அனலிஸ்ட் ஆகிய பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை பட்டப்படிப்பனை முடித்தவர்கள் சாப்ட்வேர் இன்ஜினியர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் போன்ற வேலைகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும், டிகிரி முடித்தவர்கள் செக்ரட்டரி மற்றும் டிசைன் இன்ஜினியர் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.


தற்போது வேலைவாய்ப்பு சந்தை என்பது போட்டி நிறைந்ததாக மாறி இருப்பதால் புதிதாக கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு வருபவர்கள் தற்போது உள்ள தேவைகளுக்கு ஏற்ப தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும், பெரும்பாலான துறைகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் வந்து விட்டதால் அதற்கு ஏற்ற வகையில் பட்டதாரிகள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று லிங்குடின் தளத்தின் வேலைவாய்ப்பு நிபுணர் நிராகஜிதா பானர்ஜி கூறியுள்ளார்.


துறை சார்ந்த வல்லுனர்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வது மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்வது இந்த இரண்டும் தான் ஒருவருக்கு அவர்கள் விரும்பக்கூடிய வேலை வாய்ப்பினை பெற்று தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations