Advertisement

Responsive Advertisement

நாமினி இல்லை; இ.பி.எஃப் உறுப்பினரின் மரணத்துக்கு பின் பி.எஃப் பணம் யாருக்கு கிடைக்கும்?


 இ.பி.எஃப் திட்டத்தின் கீழ், பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் பங்களிக்கின்றனர்.

11 Jun 2024 17:58 IST

author-image

Listen to this article

Epfo Update  | முதலீட்டாளரின் மரணத்துக்கு பின்னர்,நாமினிகள் பலன்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால், நாமினி நியமனம் முதலீட்டின் இன்றியமையாத பகுதியாகும். இந்நிலையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு, ஒரு உறுப்பினரின் மரணம் ஏற்பட்டால், பி.எஃப் நன்மைகள் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளில் ஒரு பகுதியைப் பெற நாமினிகளை அனுமதிக்கிறது.



தற்போது, இ.பி.எஃப் திட்டத்தின் கீழ், பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை ஊழியர் மற்றும் முதலாளி இருவரும் பங்களிக்கின்றனர். இ.பி.எஃப் டெபாசிட்டுகளுக்கு தற்போது 8.1 சதவீதம் ஆண்டு வட்டி விகிதம் கிடைக்கிறது.


இந்த நிலையில் சமீபத்தில் இ.பி.எஃப்.ஓ சமீபத்தில் நாமினி இல்லாத கணக்குகள் தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் சட்டப்பூர்வ வாரிசு அல்லது நபர்களுக்கு இந்தப் பணம் கொண்டு சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இ.பி.எஃப் அல்லது இ.பி.எஸ் நியமனத்தை ஆன்லைனில் சமர்பிப்பது எப்படி?

EPFO இணையதளம் > சேவைகள் > பணியாளர்களுக்கு, > "உறுப்பினர் UAN/ஆன்லைன் சேவைகள்" என்பதைக் கிளிக் செய்யவும்.

UAN மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழையவும்.

நிர்வகி தாவலின் கீழ் ‘இ-நாமினேஷன்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

விவரங்களை வழங்கு தாவல் திரையில் தோன்றும். ‘சேமி’ என்பதைக் கிளிக் செய்யவும்.

குடும்ப அறிக்கையைப் புதுப்பிக்க ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளைச் சேர்க்க குடும்ப விவரங்களைக் கிளிக் செய்யவும்.

மொத்த பங்கின் தொகையை அறிவிக்க பரிந்துரை விவரங்களை கிளிக் செய்யவும்.

Save EPF பரிந்துரையைக் கிளிக் செய்யவும்.

OTP ஐ உருவாக்க E-sign ஐக் கிளிக் செய்து அதைச் சமர்ப்பிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations