Advertisement

Responsive Advertisement

கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த HDFC பேங்க்..


  ரூ. 3000 வரை கட்டணம் உயரப்போகுது! | Attention HDFC credit cardholders! New Charges and Fees from August 1st

Published: Thu, 27 Jun 2024, 21:37 PM


கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு HDFC பேங்க் அதிர்ச்சி தரும் செய்தியைக் கொண்டு வந்துள்ளது. ஆகஸ்ட் 1, 2024 முதல், வாடகை, எரிபொருள் மற்றும் பிற பயன்பாட்டு கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் கிரெடிட் கார்டு செலவுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த அறிவிப்பினை வாங்கி அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.



வாடகை பரிவர்த்தனைகள்: முன்பு, வாடகை செலுத்துவதற்கு HDFC பேங்க் கிரெடிட் கார்டுடன் CRED, PayTM, Cheq, MobiKwik, Freecharge போன்ற மூன்றாம் தரப்பு கட்டண தளங்களைப் பயன்படுத்தும் போது எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால் இப்போது, இந்த சேவைகளைப் பயன்படுத்தி வாடகை செலுத்தும் போது, பரிவர்த்தனைத் தொகையில் 1% கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.3000 வரை இந்தக் கட்டணம் இருக்கும்.


Credit Card  HDFC bank

எரிபொருள் பரிவர்த்தனைகள்



கன்ஸ்யூமர் கார்டு: ரூ.15000-க்கும் குறைவாக எரிபொருளுக்கு செலவு செய்தால், கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. ஆனால், ரூ.15000-க்கு மேல் செலவு செய்தால், முழுத் தொகையிலும் 1% கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சம் ரூ.3000 வரை இந்தக் கட்டணம் இருக்கும்.


பிசினஸ் கார்டு: ரூ.30,000-க்கும் குறைவாக எரிபொருளுக்கு செலவு செய்தால், கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால், ரூ.30,000-க்கு மேல் செலவு செய்தால், முழுத் தொகையிலும் 1% கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சம் ரூ.3000 வரை இந்தக் கட்டணம் இருக்கும்.



பயன்பாட்டு கட்டணங்கள் (Utility Expense)


கன்ஸ்யூமர் கார்டு: ரூ.50,000-திற்க்கும் குறைவாக பயன்பாட்டு கட்டணம் செலுத்தினால், கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால், ரூ.50,000-திற்க்கு மேல் செலுத்தினால், முழுத் தொகையிலும் 1% கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சம் ரூ.3000 வரை இந்தக் கட்டணம் இருக்கும்.



பிசினஸ் கார்டு: ரூ.75,000-திற்க்கும் குறைவாக பயன்பாட்டு கட்டணம் செலுத்தினால், கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால், ரூ.75,000-திற்க்கு மேல் செலுத்தினால், முழுத் தொகையிலும் 1% கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சம் ரூ.3000 வரை இந்தக் கட்டணம் இருக்கும்.


குறிப்பு: காப்பீட்டு பரிவர்த்தனைகள் பயன்பாட்டு கட்டணங்களாகக் கருதப்படாது, எனவே அவற்றுக்கு கூடுதல் கட்டணம் இல்லை.



கல்வி கட்டணங்கள்: கல்லூரி/பள்ளி இணையதளங்கள் அல்லது அவர்களின் POS இயந்திரங்கள் மூலம் கல்வி கட்டணம் செலுத்தும் போது, எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால், CRED, PayTM, Cheq, MobiKwik போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் கல்வி கட்டணம் செலுத்தும் போது, 1% கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சம் ரூ.3000 வரை இந்தக் கட்டணம் இருக்கும்.


வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை கட்டணங்கள்: வெளிநாட்டு நாணய பரிவர்த்தனை செய்யும் போது, 3.5% மார்க்அப் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தக் கட்டணம் Infinia, Infinia (Metal Edition), Diners Black, Diners Black (Metal Edition), Biz Black Metal Card, Regalia Gold, BizPower, Tata Neu Infinity HDFC Bank ஆகிய கிரெடிட் கார்டுகளுக்கு 2% கட்டணமும், 6E Rewards Indigo XL கார்டுக்கு 2.5% மார்க்அப் கட்டணமும் வசூலிக்கப்பட்ட உள்ளது.



இனிமேல் ரிவார்டு புள்ளிகளை ஸ்டேட்மெண்ட் கிரெடிட்டாக (கேஷ்பேக்) மாற்றம் செய்யும் போது, ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும். அனால் இந்தக் கட்டணம் Infinia, Infinia (Metal Edition), Diners Black, Diners Black (Metal Edition), BizBlack Metal, Swiggy HDFC Bank, Flipkart wholesale போன்ற கார்டுகளுக்கு கிடையாது.



HDFC பேங்க் கிரெடிட் கார்டு கட்டணங்களில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் வாடிக்கையாளர்களின் செலவுகளை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வாடகை, எரிபொருள், பயன்பாட்டு கட்டணங்கள் போன்ற செலவுகளுக்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது, 1% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.



எனவே, HDFC பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதற்கு முன், கட்டண விவரங்களைக் கவனமாகப் படித்து, தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்க வாடிக்கையாளர்கள் திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டியது அவசியம்.


More From GoodReturns

ஜூலை 1 முதல் கிரெடிட் கார்டுகளில் வரப் போகும் மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு.. வங்கிகளுக்கு சிக்கல்!


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations