Advertisement

Responsive Advertisement

விமானப் படை வேலை வாய்ப்பு; 304 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 

விமானப்படை வேலைவாய்ப்புக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு; 304 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

27 Jun 2024 18:18 IST

author-image

Listen to this article

இந்திய விமானத்துறையில் பணிபுரிய விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விமானப்படைக்கான பொது நுழைவுத் தேர்வுக்கான (AFCAT) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பு AFCAT க்கான இரண்டாம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பாகும். மொத்தம் 304 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. விமானப் படையில் வேலை பார்க்க விரும்புபவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.



பணியிடங்களின் விவரம்


AFCAT Entry 


காலியிடங்களின் எண்ணிக்கை: 304



Flying – 29 (ஆண்கள் – 18, பெண்கள் - 11)


Ground Duty (Technical) – 156 (ஆண்கள் – 124, பெண்கள் - 32)


Ground Duty (Non-Technical) – 119 (ஆண்கள் – 95, பெண்கள் - 24)



வயதுத் தகுதி : Flying பணியிடங்களுக்கு 20 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற பணியிடங்களுக்கு 20 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


கல்வித் தகுதி : Flying பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்கள் படித்திருக்க வேண்டும்.



Ground Duty (Technical) பணியிடங்களுக்கு ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் அல்லது சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500


தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://afcat.cdac.in என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 



விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.06.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://afcat.cdac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations