Advertisement

Responsive Advertisement

SBI வங்கியில் ரூ.1,20,000 பிக்சட் டெபாசிட் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன்ஸ் தெரியுமா?


 FD (பிக்சட் டெபாசிட்) என்பது ஒரு தனிநபர் குறிப்பிட்ட தொகையை வங்கியில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒருவகையான முதலீட்டு திட்டம் ஆகும். FD-களில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் வட்டி வருமானத்தை பெற முடியும். அதுவும் SBI வங்கி, FD திட்டங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. இந்தப் பதிவில் ரூ.40,000, ரூ.80,000, ரூ. 1,20,000 மற்றும் ரூ. 1,50,000 முதலீட்டுக்கான SBI வழங்கும் வட்டி வருமானத்தை பார்ப்போம்.



FD வைத்திருப்பவர்கள் தங்கள் வட்டியை மாதந்தோறும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என எப்படி பெற வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். FD-களில் முதலீடு செய்யும் அசல் தொகைக்கு எந்த வித இழப்பும் இல்லை என்பதனால், இவை சிறந்த முதலீட்டு தேர்வாக முதலீட்டாளர்களிடையே விளங்குகிறது. மேலும் சில வரி சேமிப்பு FD-களில் முதலீடு செய்தால், நீங்கள் வரி செலுத்துவதில் உள்ள குறிப்பிட்ட சதவீத பணத்தை சேமிக்க முடியும்.



SBI  investment  savings

FD மீதான வட்டி விகிதம்: வங்கிக்கு வங்கி வட்டி விகிதம் மாறுபடும். இது முதலீட்டின் காலம் மற்றும் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைப் பொறுத்தது.


ரூ. 40,000, ரூ.80,000, ரூ.1,20,000 மற்றும் ரூ.1,50,000 SBI பேங்க் FD முதலீடுகளில் உங்களுக்கு என்ன கிடைக்கும்?:



ரூ. 40,000 தொகையை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 1 வருடத்திற்கு 40,000 ரூபாய் FD-களில் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு 42,790 ரூபாய் கிடைக்கும். 6.8 சதவீத வட்டி விகிதத்தில் ரூ. 2,790 வட்டி வழங்கப்படும்.


ரூ. 80,000 தொகையை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால்: ரூ.80,000 FD-களில் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில், ரூ. 85,580 கிடைக்கும். 6.8 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.5,580 வட்டி வழங்கப்படும்.


ரூ. 1,20,000 தொகையை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால்: மேலும், நீங்கள் ரூ.1,20,000 FD-களில் முதலீடு செய்தால், முதிர்வுத் தொகை ரூ.1,28,370 கிடைக்கும். 6.8 சதவீத வட்டி விகிதத்தில், ரூ.8,370 வட்டி வழங்கப்படும்.



ரூ. 1,50,000 தொகையை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் ரூ.1,50,000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு 6.8 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.1,60,463 கிடைக்கும். வட்டித் தொகை ரூ.10,463 ஆக இருக்கும்.


ரூ. 40,000 தொகையை 3 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 3 ஆண்டுகளுக்கு 40,000 ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு 48,896 ரூபாய் கிடைக்கும். 6.75 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.8.896 வட்டி வழங்கப்படும்.



ரூ. 80,000 தொகையை 3 வருடத்திற்கு முதலீடு செய்தால்: ரூ.80,000 முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.97,791 கிடைக்கும். 6.75 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.17,791 வட்டி வழங்கப்படும்.


ரூ. 1,20,000 தொகையை 3 வருடத்திற்கு முதலீடு செய்தால்: மேலும், நீங்கள் ரூ.1,20,000 முதலீடு செய்தால், முதிர்வுத் தொகை ரூ.1,46,687 கிடைக்கும். 6.75 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.26,687 வட்டி வழங்கப்படும்.



ரூ. 1,50,000 தொகையை 3 வருடத்திற்கு முதலீடு செய்தால்: அதேபோல, ரூ.1,50,000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு 6.75 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.1,83,359 கிடைக்கும். வட்டித் தொகை ரூ.33,359 ஆக இருக்கும்.


ரூ. 40,000 தொகையை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால்: நீங்கள் 5 ஆண்டுகளுக்கு 40,000 ரூபாய் முதலீடு செய்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு 55,217 ரூபாய் கிடைக்கும். 6.50 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.15,217 வட்டி வழங்கப்படும்.


ரூ. 80,000 தொகையை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால்: ரூ.80,000 FD-களில் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.1,10,434 கிடைக்கும். 6.50 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30,434 வட்டி வழங்கப்படும்.



ரூ. 1,20,000 தொகையை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால்: மேலும், நீங்கள் ரூ.1,20,000 முதலீடு செய்தால், முதிர்வுத் தொகை ரூ.1,65,650 கிடைக்கும். அதற்கு 6.50 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.45,650 வட்டி வழங்கப்படும்.


ரூ. 1,50,000 தொகையை 5 வருடத்திற்கு முதலீடு செய்தால்: அதேபோல, ரூ.1,50,000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு 6.50 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.2,07,063 கிடைக்கும். வட்டித் தொகை ரூ.57,063 ஆக இருக்கும்.


மூத்த குடிமக்களுக்கு, 1 வருடம், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான FD திட்டங்களில் 7.30 சதவீதம், 7.25 சதவீதம் மற்றும் 7.50 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.



More From GoodReturns

ஜியோ, ஏர்டெல்-க்கு இணையான 4ஜி, 5ஜி விரிவாக்கம்.. வோடபோன் ஐடியா-வின் ரூ.23000 கோடி மெகா கடன் திட்டம்!


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations