(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

100 நாள் வேலை திட்டம்.. மத்திய அரசு அறிவித்த GOOD NEWS! 100 நாள் வேலை திட்டம்


 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்

கடந்த 2006 ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம் நாடுமுழுவதும் 6 கோடிக்கும் மேலான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.



100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்

100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்

இந்நிலையில் தற்போது இத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இதன்படி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


Also read:

இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தினசரி ஊதியம் ரூ.294ஆக இருந்தநிலையில், ரூ. 319ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று மத்திய அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.



Loading video

மாநிலங்களுக்கு மாநிலம் ஊதியம் உயர்த்தப்படுவது ஏன்?

அந்தந்த மாநிலங்களில் உள்ள செலவீனங்கள், பண வீக்கம் ஆகியவற்றை கணக்கில் கொண்டுதான் இவை நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று கூறப்பட்டாலும் மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப நாட்கள் நீட்டிக்கவும், குறைக்கவும் படுகிறது. அதனாலும் ஊதியத்தில் மாற்றம் உள்ளது.

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations