Advertisement

Responsive Advertisement

எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட்; 2 ஆண்டு முதலீடு: எவ்வளவு ரிட்டன்?


 நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் புதிய ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் ஜூலை 2024 15 முதல் அமலில் உள்ளன.

11 Jul 2024 10:34 IST



நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) 3 கோடி ரூபாய் வரையிலான சில்லறை டெர்ம் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்நிலையில், 7 நாட்களில் தொடங்கி 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் டெபாசிட்களுக்கு 3.5-7 சதவீதம் ஆண்டு வருமானத்தை அளிக்கும் அதே வேளையில், மூத்த குடிமக்களுக்கு 4-7.5 சதவீதமாக வட்டி விகிதம் உயர்கிறது.



அதாவது, ஜூன் 15, 2024 முதல், மூத்த குடிமக்கள் மற்றும் இதர வைப்பாளர்களுக்கு சில்லறை நிலையான வைப்புகளுக்கு 7.5 சதவீதம் மற்றும் 7.0 சதவீதம் வட்டி விகிதங்களை எஸ்பிஐ வழங்குகிறது.



3 கோடி வரையிலான எஸ்.பி.ஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்

டெபாசிட் காலம்

பொதுகுடிமக்கள் வட்டி விகிதம் (%)

மூத்தக் குடிமக்கள் வட்டி (%)

7-14 நாள்கள் 3.50% 4.00%

46-179 நாள்கள் 5.50% 6.00%

180-210 நாள்கள் 6.25% 6.75%

211 நாளகள் முதல் ஓராண்டுக்குள் 6.50% 7.00%

1-2 ஆண்டுக்குள் 6.80% 7.30%

2-3 ஆண்டுகள் 7.00% 7.50%

3-5 ஆண்டுகள் 6.75% 7.25%

5-10 ஆண்டுகள் 6.50% 7.50%

இந்தத் திட்டத்தில் 3 மாதத்துக்க ஒருமுறை கூட்டு வட்டியில் வட்டி வரவு வைக்கப்படும். 2 ஆண்டுகால டெபாசிட் திட்டத்தில் 2 ஆண்டுகால டெபாசிட்டில் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்தால் ரூ.57444 கிடைக்கும். அதாவது வட்டியாக மட்டும் 7,444 கிடைக்கும்.



ரூ.75 ஆயிரம் முதலீடு செய்தால் வட்டி ரூ.11,166 ஆகவும் முதிர்ச்சியின்போது ரூ.86166ம் கிடைக்கும். இதுவே மூத்தக் குடிமக்கள் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் வட்டி ரூ.8011உடன் சேர்த்து முதிர்ச்சியின்போது ரூ.58011 கிடைக்கும்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations