(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

கத்தாரில் இருக்கும் இந்தியர்களுக்கு குட்நியூஸ்..!! மத்திய அரசு கொண்டு வந்த புதிய சேவை..!!


 தோஹா: இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளில் முக்கியமான நாடாக இருக்கும் கத்தாருக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும், கத்தாரில் பணியாற்றும் இந்திய பணியாளர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு தனது UPI பேமெண்ட் முறையை அறிமுகம் செய்து சர்வதேச அளவிலான நிதி பரிமாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது.


கத்தாரில் உள்ள இந்தியர்கள் விரைவில் யூபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்ய உள்ளனர். இதற்காக மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனமான கத்தார் தேசிய வங்கி (QNB) உடன் இந்திய தேசிய பணப்பரிமாற்ற கழகத்தின் சர்வதேச பிரிவான NIPL ஒப்பந்தம் செய்துள்ளது.



UPI  Qatar  NPCI

இந்த ஒப்பந்தத்தின் மூலம் கத்தாரில் உள்ள கியூஎன்பி வணிக நிறுவனங்களில் பேமெண்ட் நெட்வொர்க்கில் யூபிஐ மூலம் பணம் செலுத்த முடியும். இதன் மூலம் கத்தாருக்கு வரும் இந்தியர்களுக்கு பெரும் சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என NPCI இன் துணைத் தலைவர் அனுபவ் ஷர்மா தெரிவித்தார்.


2024 ஆம் ஆண்டில், இந்தியாவிலிருந்து 98 லட்சம் பேர் வளைகுடா நாடுகளுக்குச் சுற்றுலா செல்ல உள்ளதாகக் கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில் இந்த யூபிஐ சேவை அறிமுகத்தின் மூலம் இந்திய பணிகள் தாங்கள் பயன்படுத்தும் யூபிஐ செயலி வாயிலாக பேமெண்ட் செய்ய முடியும். இதில் 52.9 லட்சம் பேர் இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கும் செல்ல வாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த புதிய முறை மூலம் கத்தாரில் உள்ள கடைகள், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள், வரிசங்குடி கடைகள் மற்றும் ஹோட்டல்களில் இந்தியர்கள் தங்களுக்கு பிடித்தமான முறையில் பணம் செலுத்த முடியும்.


சமீபத்தில் NPCI இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் லிமிடெட் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் டிஜிட்டல் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நெட்வொர்க் இன்டர்நேஷனல் (Network International) நிறுவனத்துடன் இணைந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் யூபிஐ பணப்பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் உள்ள நெட்வொர்க் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் பாயிண்ட்-ஆஃப்-சேல் (POS) டெர்மினல்கள் வாயிலாக கியூஆர் குறியீடு மூலம் யூபிஐ பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations