Advertisement

Responsive Advertisement

கிரெடிட் கார்டு வட்டி விகிதம் என்றால் என்ன?:


கிரெடிட் கார்டு வட்டி விகிதம் என்பது, நீங்கள் செலுத்தாத நிலுவைத் தொகைக்கு கிரெடிட் கார்டு நிறுவனம் விதிக்கும் கட்டணமாகும். பொதுவாக, கிரெடிட் கார்டுகளின் வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருக்கும். இவை வருடத்திற்கு 24 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இருக்கலாம்.


கிரெடிட் கார்டுகளின் வட்டி விகிதம் பயனர்களை எவ்வாறு பாதிக்கிறது? கிரெடிட் கார்டு பில்லை முழுவதுமாக செலுத்தத் தவறினால் நிலுவைத் தொகை மீது வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டியை ஒரு மாதத்திற்கு கட்டத் தவறினாலும் கூட மறு மாதத்திற்கு அந்த வட்டியையும் நிலுவைத் தொகையும் சேர்த்து மீண்டும் வட்டி விதிக்கப்படுகிறது.


உதாரணமாக வள்ளி என்ற பெண் புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தனது கிரெடிட் கார்டில் 7,000 ரூபாய் செலவு செய்து இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த கிரெடிட் கார்டின் APR விகிதம் 12%



முதலில், இந்த வருடாந்திர வட்டியை மாத வட்டியாக மாற்ற வேண்டும். ஏனென்றால், வட்டி பொதுவாக மாத அடிப்படையில் தான் கணக்கிடப்படுகிறது. 1 வருடத்தில் 12 மாதங்கள் இருப்பதால், வருடாந்திர வட்டி விகிதத்தை 12-ஆல் வகுக்க வேண்டும்.


12% / 12 = 1%


எனவே, இந்த உதாரணத்தில், வள்ளி மாதத்திற்கு 1% வட்டி செலுத்த வேண்டி இருக்கும். அடுத்து, நிலுவைத் தொகையை கருத்தில் கொள்ள வேண்டும். நிலுவைத் தொகை என்பது உங்கள் கிரெடிட் கார்டு பில் செலுத்தப்படாத மொத்த தொகையாகும். நிலுவைத் தொகை ரூ.7,000 என்று வைத்துக்கொள்வோம்.


இப்போது, மாதாந்திர வட்டி விகிதத்தை நிலுவைத் தொகையால் பெருக்கவும்.


1% x ரூ.7,000 = 1/100 x ரூ.7,000 = ரூ.70


எனவே, இந்த உதாரணத்தில், ஒவ்வொரு மாதமும் வள்ளி ரூ.70 மாதாந்திர வட்டி செலுத்த வேண்டும்.



மேலும் மேற்கண்ட விவரம் ஒரு உதாரணம் மட்டுமே. இதை வைத்து உங்களுடைய வட்டி விகிதம் மற்றும் பிற விவரங்களை வைத்து மாதாந்திர வட்டியை நீங்களே கால்குலேட் செய்து கொள்ள முடியும்.


இந்த சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால் கடனை அடைப்பதற்கு பதிலாக வட்டி செலுத்துவதற்காகவே பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.


கிரெடிட் கார்டு வட்டி விகிதத்தை எவ்வாறு தவிர்க்கலாம்?:



முழு பில் தொகையையும் காலக்கெடுவுக்குள் செலுத்தி விடுங்கள்: உங்கள் கிரெடிட் கார்டு பில்லை ஒவ்வொரு மாதமும் முழுவதுமாக செலுத்துவதே, வட்டி விகிதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி.


கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்துங்கள்: தேவையான செலவுகளுக்கு மட்டுமே கிரெடிட் கார்டைப் பயன்படுத்துங்கள். தேவையற்ற செலவுகளுக்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்த வேண்டாம்.


குறைந்த வட்டி விகிதம் உள்ள கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யுங்கள்: கிரெடிட் கார்டுகளை வழங்கும் நிறுவனங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். குறைந்த வட்டி விகிதம் வழங்கும் கார்டைத் தேர்வு செய்யுங்கள்.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations