Advertisement

Responsive Advertisement

சேலம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. செப்டம்பர் 20ம் தேதி மிக முக்கியமான நாள்.. கலெக்டர் அறிவிப்பு


சேலம்: சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேலத்தில் வருகின்றன செப்டம்பர் 20-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார். முழு விவரங்களை பதிவில் பார்ப்போம்.




பொதுவாக இன்றைய சூழலில் நல்ல வேலையில் சேருவது என்பது சவாலான காரியம். தொழில்நுட்ப ரீதியாக பயிற்சி பெற்றவர்கள், நல்ல அனுபவம் உள்ளவர்களுக்கே வேலை கிடைக்கிறது.. நல்ல திறமையாக பணியாற்றக்கூடியவர்களுக்கு அதிக ஊதியத்துடன் வேலை கிடைக்கிறது. அரசு வேலையில் 60 வயதில் கிடைக்கும் ஊதியம், தனியார் துறையில் 35 வயதிலேயே அடைய முடிகிறது.

அதற்கு காலத்திற்கு தகுந்தாற்போல் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி அப்டேட் ஆகிக்கொண்டே இருக்க வேண்டும். அப்டேட் ஆக முடியாதவர்கள் எந்த துறையிலும் தற்போது வேலையில் நீடிக்க முடியாது.




அதேபால் ஒருவர் தனியார் துறையை பொறுத்தவரை நீண்ட காலம் வேலையில் இருக்க வேண்டும் என்றால், அவரால் அந்த நிறுவனத்திற்கு அதிகபட்ச லாபம் மற்றும் அவரால் தான் அந்த பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அப்படி இருந்தால் பிரச்சனை இல்லை.. மாறாக அவர் இல்லாவிட்டாலும் பணிகள் சிறப்பாக நடைபெறும். 

அவரைவிட சிறந்த பணியாளர்கள் எளிதாக கிடைக்கும் நிலை இருந்தால், குறிப்பிட்ட பணியாளர் வேலைவாய்ப்பை இழப்பதுடன், சம்பளமும் பெரிய அளவில் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. எனவே தனியார் துறையை பொறுத்தவரை திறமையை வளர்த்துக் கொண்டே இருப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். சேலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்று வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.



 இதுபற்றி சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. Sunita Williams உயிருக்கு ஆபத்தா? கை கொடுப்பாரா Elon Musk?

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சார்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.



 "இந்தியாவில் அல்ல.. உலகிலேயே பெரிய ரிங் ரோடு.. அதுவும் தமிழ்நாட்டில் வருது.. எங்கே தெரியுமா? " சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 20-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் இம்முகாமில் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன்பெறலாம். எனவே, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுனர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations