(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 அண்ணா பல்கலை. வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!



அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர், ஓட்டுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 8 ஆம் வகுப்பு, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

31 Aug 2024 13:07 IST

author-image



சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் ரிமோட் சென்சிங் நிறுவனத்தில் உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.08.2024



Professional Assistant – I


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி : B.E./B.Tech in Geoinformatics / civil / Computer Science / IT படித்திருக்க வேண்டும். 


சம்பளம் : தினசரி ரூ. 915


Peon cum Driver


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.



சம்பளம் : தினசரி ரூ. 623


வயதுத் தகுதி: 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


முகவரி: The Director, Institute of Remote Sensing, Anna University, Chennai-600 025


விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“




Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations