(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

Accenture வேலைவாய்ப்பு.. கோவையில் நியமனம்.. Hybrid முறையில் பணி

 


சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான Accenture-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளதோடு, ஹைபிரிட் (Hybrid) முறையில் பணி வழங்கப்பட உள்ளது.


ஆக்சென்ச்சர் (Accenture) ஐடி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, கொல்கத்தா, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், இந்தூர், குர்கிராம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.




அதேபோல், தமிழகத்தில் சென்னை, கோவை இடங்களிலும் ஆக்சென்ச்சர் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் ஆக்சென்ச்சரில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: அனுபவம் வேண்டாம்.. ஆண்டுக்கு ரூ.10 லட்சம் டூ ரூ.20 லட்சம் வரை சம்பளம்..

 அழைக்கும் எச்சிஎல் நிறுவனம் தற்போதைய அறிவிப்பின்படி கோவை ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் அப்ளிகேஷன் டெவலப்பர் (Application Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்களுக்கு எந்தவித பணி அனுபவமும் தேவையில்லை. இருப்பினும் கூட விண்ணப்பம் செய்வோருக்கு சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி முடித்தாலே போதும்.. Accenture ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு..




 சென்னையிலேயே பணி அதன்படி SAP CO Product Cost Controlling தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக SAP FI SAP MM மற்றும் SAP PP Modules பற்றிய புரிதல் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் டிசைன், பில்ட், கான்ஃபிகர் அப்ளிகேஷன் வேலையை செய்ய வேண்டி இருக்கும். தற்போதைய அறிவிப்பின்படி சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

பணிக்கு தேர்வாகும் நபர்கள் கோவையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இது ஒரு ஹைபிரிட் (Hybrid) வகை பணியாகும். இதனால் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் அலுவலகம் சென்றால் போதும். 2 நாட்கள் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என அதிகாரப்பூர்வ அறிவப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஆக்சென்ச்சர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் பற்றியும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே இந்த பணியை விரும்புவோர் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.





Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations