Advertisement

Responsive Advertisement

தங்கம் விலை திடீர் சரிவு.. நகை வாங்க சரியான நேரமா? இன்று சென்னையில் தங்கத்தின் விலை என்ன?


 சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 120 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று சரிவைக் கண்டுள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 15 விலை குறைந்து ரூ.7080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.




சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணம் செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை இந்த ஆண்டின் ஏப்ரல் மாதவாக்கில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில் அதன்பிறகு ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. செப்டம்பரில் மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி சுங்க வரி குறைப்பால் தங்கம் விலை சரிந்தது. அமெரிக்க ஃபெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, விலை சரிவு நின்று, அதன்பிறகு வேகமாக தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,095-க்கு விற்பனையானது. சென்னையில் இன்று (செப்டம்பர் 30) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 15 குறைந்துள்ளது. 



இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 8 கிராம் (ஒரு சவரன்) ஆபரணத் தங்கம் ரூபாய் 120 குறைந்து, ரூபாய் 56,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.60,280 ஆகவும் கிராம் ரூ. 7,535 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை முறையாக கிராம் ரூபாய் 7 ஆயிரத்தை எட்டிய நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. தங்கத்தின் தொடர் விலையேற்றம், தங்க நகை வாங்க எண்ணிய மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது நிம்மதியைக் கொடுத்துள்ளது. அதேசமயம், தங்கம் விலை தொடர்ந்து குறையுமா அல்லது மீண்டும் ஏற்றத்தைச் சந்திக்குமா என மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். வெள்ளி விலையைப் பொறுத்தவரை, விலை மாற்றமின்றி கிராம் ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.1,01,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations