(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

"சென்னை டி.சி.எஸ் நிறுவன வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!




டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் வேலை; தகுதியுள்ளவர்கள் சான்ஸை மிஸ் பண்ண வேண்டாம்; உடனே விண்ணப்பிங்க!

04 Sep 2024 13:43 IST


சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஐ.டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸில் (Tata Consultancy Services) டெவலப்பர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐ.டி நிறுவனங்களில் ஒன்று டிசிஎஸ் (TCS). இந்த நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி எனப் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. சிறந்த வேலை வாய்ப்புச் சூழல் மற்றும் தகுதிகேற்ற சம்பளம் வழங்கும் இந்த நிறுவனத்தில் வேலைப் பார்க்க வேண்டும் என பலரும் விரும்புவர்.



இந்தநிலையில், டி.சி.எஸ் நிறுவனத்தில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டி.சி.எஸ் நிறுவனத்தில் ஜாவா டெவலப்பர் (Java Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோருக்கு ஸ்பிரிங் பூட் மைக்ரோ சர்வீசஸ் (Spring Boot Micro Services), ஹைபர்நேட் (Hibernate), ஸ்பிரிங் எம்.வி.சி (Spring MVC), ஜாவா ரெஸ்ட்ஃபுல் சர்வீசஸ் (Java Restful Services) உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


இதுதவிர ஜாவா புரோகிராமை பயன்படுத்தி அப்ளிகேஷன் டெவலப்மென்ட் பற்றி தெரிந்திருக்க வேண்டும். டீபக் (Debug) திறமை இருக்க வேண்டும். மேலும் ஜாவா கோர் கான்செப்ட்டுஸ் (Java Core Concepts), டேட்டாபேசஸ் (Database) உள்ளிட்டவற்றில் பணி அனுபவம் இருக்க வேண்டும். இது தவிர இந்த பொறுப்பில் 4 முதல் 6 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.


இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations