Advertisement

Responsive Advertisement

Salem Jobs : தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு; சேலம் மாவட்டத்தில் காலியாகவுள்ள இடங்கள்

 


Recruitment Under National Tuberculosis Elimination Programme : சேலம் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கீழ் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட சுகாதார சங்கம் வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்கள் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.




பணியின் விவரங்கள் :

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர்2
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்3
காசநோய் சுகாதார பணியாளர்3
ஆய்வக நுட்பனர்6

வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.



கல்வி மற்றும் இதர தகுதிகள் :
இப்பணியிடங்களுக்கு பதவிக்கு ஏற்ற பிரிவில் அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், பதவி சார்ந்த படிப்பில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக துறை சார்ந்த அனுபவம் தேவை.

சம்பள விவரம் :

  • முதுநிலை ஆய்வக மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.19,800, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.19,800 மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • காசநோய் சுகாதார பணியாளர் பதவிக்கு ரூ.13,300 மற்றும் ஆய்வக நுட்பனர் பதவிக்கு ரூ.13,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான அறிவிப்பு கொடுக்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத் தேர்வு விவரங்கள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். சேலம் மாவட்டத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பவரக்ள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் புகைப்படத்துடன் கூடிய சுய விபரக்குறிப்பு, குடும்ப அட்டை/ ஆதார் அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ கடவுச்சீட்டு ஏதாவது ஒன்றின் நகல், கல்வித்தகுதிக்கான சான்றிதழ் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து தபால் வழியாகமோ அலல்து நேரிலோ சென்று விண்ணப்பிக்கவும். விண்ணப்பப்படிவத்தை https://salem.nic.in/ என்ற இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.




விண்ணப்பிக்க கடைசி நாள் :

விவரம்முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்23.09.2023 மாலை 5.30 மணி
நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் மேல் குறிப்பிட்ட விவரங்கள் படி உடனே விண்ணப்பிக்கலாம்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations