(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

SBI பேங்க் பிக்சட் டெபாசிட்: 10 லட்சம் முதலீட்டுக்கு 14 லட்சம் கிடைக்கும்.. ஆச்சர்யமான வருமானம்! | SBI FD Scheme: How much you can earn on a Rs.10 Lakh Investment Over 1, 2, 3, and 5 Years

 SBI பேங்க் பிக்சட் டெபாசிட்: 10 லட்சம் முதலீட்டுக்கு 14 லட்சம் கிடைக்கும்.. ஆச்சர்யமான வருமானம்! | SBI FD Scheme: How much you can earn on a Rs.10 Lakh Investment Over 1, 2, 3, and 5 Years

Updated: Mon, 2 Sep 2024, 19:59 PM



தங்களுடைய நிதி எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் எனும் பட்சத்தில் பல முதலீட்டாளர்கள் தேர்வு செய்வது பிக்சட் டெபாசிட் திட்டங்களைத் தான். அதற்கு ஏதுவாக பல வங்கிகளும் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பல்வேறு பிக்சட் டெபாசிட் திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் முதலீட்டாளர்களிடைய பணம் பத்திரமாக இருப்பதை உறுதி செய்கிறது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை எந்த கால வரையறையை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.


இந்தப்பதிவில் 10 லட்ச ரூபாயை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிக்சட் டெபாசிட்டில் 1 வருடம், 2 வருடம், 3 வருடம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.


sbi   investment  fixed deposit

1 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்: குறுகிய காலத்தில் முதலீடு செய்து வருமானம் ஈட்ட வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 1 வருட பிக்சட் டெபாசிட்களை வழங்குகிறது. இந்த வகை பிக்சட் டெபாசிட்களுக்கு 6.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் 10 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் அதற்கான வட்டியாக 69,753 கிடைக்கும். அப்படியானால் முதிர்வு தொகையாக 10,69,753 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.


2 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்: அதே 10 லட்ச ரூபாய் முதலீட்டை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்தால் SBI பேங்க் சற்று அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. 2 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அப்படியானால் உங்கள் 10 லட்சம் முதலீட்டிற்கு 1,48,881 ரூபாய் வட்டி வருமானமாக கிடைக்கும். முதிர்வு காலத்தில் அதாவது 2 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் 11,48,881 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.


3 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்: நீங்கள் 3 வருட கால பிக்சட் டெபாசிட்டைத் தேர்ந்தெடுத்தால் 6.75% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதே 10 லட்ச ரூபாய் முதலீட்டிற்கு வட்டி வருமானமாக 2,22,393 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு தொகையாக 12,22,393 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.


5 ஆண்டு கால பிக்சட் டெபாசிட்: நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்புவோருக்கு 5 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 6.50 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த FD திட்டத்தில் 10 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் வட்டி வருமானமாக 3,80,419 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு தொகையாக 13,80,419 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.


மூத்த குடி மக்களுக்கான சிறப்பு சலுகைகள்: மூத்த குடிமக்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பிக்சட் டெபாசிட்களுக்கு சிறப்பு சலுகைகளைப் பெறலாம். பொதுவாக மூத்த குடிமக்களுக்கு SBI பேங்க் கூடுதலாக 0.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் வீகேர் டெபாசிட் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு இன்னும் கூடுதலாக 0.50 சதவீத கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. அப்படியானால் மூத்த குடிமக்கள் மொத்தம் 1 சதவீத கூடுதல் வட்டியைப் பெறலாம்.


ஒரு மூத்த குடிமகன் 5 வருட "வீகேர் டெபாசிட்" திட்டத்தில் 10 லட்சத்தை டெபாசிட் செய்தால், முதிர்வுத் தொகை ரூ.14,49,948 ஆக இருக்கும். இந்தத் திட்டம் மார்ச் 31, 2024 வரை கிடைக்கும், இது மூத்த குடிமக்களுக்கு லாபகரமான வாய்ப்பை வழங்குகிறது.


More From GoodReturns

 புதிய ஃபாஸ்டேக் டிசைனை அறிமுகப்படுத்தும் SBI பேங்க்.. எந்த வாகனங்களுக்கு தெரியுமா?

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations