(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

மதுரையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்



மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலைவாய்ப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்பட்டது.



தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து மதுரை மண்டலங்கள் ஆன மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த முகாமில், தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், செல்போன் சர்வீஸ், கம்ப்யூட்டர் பயிற்சிகள், வெல்டிங் டெலிகாம் பயிற்சி மில்லட் டைலரிங், தங்க நகை மதிப்பீட்டாளர்கள், சமுதாய தொழில் பயிற்சி, பிரதான் மந்திரி திவ்யா கேந்திரா என இருவதற்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டு மாற்றுத்திறனாளிகள் அவர்களின் வசதி மற்றும் கல்வித் தகுதிக்கு ஏற்றார் போல் கலந்துரையாடி பயன் பெற்றனர்.



இது குறித்து மாற்றுத்திறனாளி இளையராஜா கூறும் பொழுது, எங்களைப் போன்று உள்ளவர்களுக்கு தமிழக அரசு சார்பாக நடைபெற்று வரும் இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. இது தொடர்ச்சியாக நடக்க வேண்டும். நானும் இந்த முகாமில் கலந்து கொண்டு தற்பொழுது ஏர்டெல் கம்பெனிகள் சிம் கார்டு விற்பனை குறித்த வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

மேலும் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா இந்த இந்த முகாமிற்கு நேரில் வந்து மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை கேட்டறிந்து கொண்டு, பிறகு முகாம்களை பார்வையிட்டுச் சென்றார்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations