(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!


 சென்னை: பணப் பரிவர்த்தனைகள் கணிசமாகக் குறைந்து வருகின்றன. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு மக்கள் மாறி வருகின்றனர். ஆன்லைனிலும் கடைகளிலும் காண்டாக்ட் லெஸ் முறையில் பணம் செலுத்தும் வசதியை இது வழங்குகிறது. அதிலும் குறிப்பாக கிரெடிட் கார்டு பணப்பரிவர்த்தனைகள் தற்போது அதிகரித்துள்ளன. இதனால் கிரெடிட் கார்டு தொடர்பான மோசடிகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. எனவே இந்த மோசடிகளைத் தடுக்க உதவும் சில வழிகளை இங்கே பார்ப்போம்.


பல கிரெடிட் கார்டுகள் ரிவார்ட்ஸ், கேஷ்பேக் சலுகைகள் மற்றும் பயணக் காப்பீடு போன்ற பிற நன்மைகளை வழங்குகின்றன. இந்தச் சலுகைகள் மக்கள் தங்கள் கார்டுகளை அடிக்கடி பயன்படுத்தத் தூண்டுகின்றன. இதனால் கிரெடிட் கார்டு தொடர்பான மோசடிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.



How to protect your credit cards from online scams

மோசடியைத் தடுப்பதற்கு தனிப்பட்ட விழிப்புணர்வு மற்றும் சில பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


1) உங்கள் பின் நம்பர், CVV மற்றும் முழு கிரெடிட் கார்டு நம்பரை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மின்னஞ்சல் அல்லது தொலைபேசியில் மோசடி கும்பல் உங்களிடம் இந்த விவரங்கள் பற்றி கேட்கலாம். தவறியும் இதுபோன்ற விவரங்களைப் பகிர்ந்து விடாதீர்கள். மேலும், வங்கிகள் இந்த தகவலை ஒருபோதும் கேட்காது. இதுபோன்ற ஃபிஷிங் முயற்சிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.


2) ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் மூலம் உங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை தவறாமல் கண்காணிக்கவும். அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதேனும் நடந்திருந்தால், உடனடியாக உங்கள் வங்கிக்கு தெரிவிக்கவும்.


3) ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, அந்த இணையதளம் முறையானது மற்றும் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்தவும். கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு பொது Wifi பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இந்த நெட்வொர்க்குகள் பாதுகாப்பு குறைவாக இருப்பதால் மோசடிகள் நடக்க வாய்ப்புள்ளது.


4) சந்தேகத்திற்கிடமான இணையதளங்களில் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை உள்ளிடுவதைத் தவிர்க்கவும். HTTPS குறியாக்கத்துடன் கூடிய பாதுகாப்பான இணையதள URLகளில் மட்டும், உங்கள் உண்மையான கார்டு விவரங்களைப் பயன்படுத்தவும்.


5) உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கைகளை தவறாமல் மதிப்பாய்வு செய்யவும். பல வங்கிகள் பரிவர்த்தனைகளுக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் நோட்டிபிகேஷன் வழங்குகின்றன. எனவே ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு இருந்தால் உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.


6) உங்கள் கார்டு விவரங்களைப் பகிரத் தேவையில்லாத மொபைல் வாலட்களுக்கு பயன்படுத்தாமல் இருக்கவும். எந்தவொரு அங்கீகரிக்கப்படாத ஆப்களையும் விரைவாகக் கண்டறிந்து, உங்கள் வங்கியில் புகாரளிக்க வேண்டும்.



7) பயோமெட்ரிக் போன்ற உங்கள் வங்கி வழங்கும் பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பாரம்பரிய மேக்னடிக் ஸ்ட்ரைப் கார்டுகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் பாதுகாப்பை வழங்கும் EMV சிப் தொழில்நுட்பம் அல்லது உங்கள் வங்கியில் கிடைக்கும் சமீபத்திய கார்டுகளைத் தேர்வுசெய்யுங்கள். இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.


8) உங்கள் கார்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். கடைகளில் அல்லது உணவகங்களில் உங்கள் பார்வைக்கு வெளியே வைக்காதீர்கள். உங்கள் கார்டு தகவலை திருடக்கூடிய ஸ்கிம்மிங் சாதனங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். பழைய கிரெடிட் கார்டு அறிக்கைகள் மற்றும் ரசீதுகளை கிழித்து டிஸ்போஸ் செய்யுங்கள்.


இதுபோன்ற சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், நீங்கள் கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து விடுபட முடியும்.


More From GoodReturns

கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations