(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

ஐசிஐசிஐ வங்கி முடிவு.. சேவை கட்டணத்தில் புதிய மாற்றம்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!


 சென்னை: இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியான ஐசிஐசிஐ பேங்க் மே 1 முதல் தனது சேவை கட்டணங்களை மாற்றி அமைப்பதாக அறிவித்துள்ளது.



இந்தியாவில் உள்ள இரண்டாவது பெரிய வங்கியான ஐசிஐசிஐ பேங்க், தனது வாடிக்கையாளர்களுக்கான சேவை கட்டணங்களை, மே 1 முதல் மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் ATM கார்டு, டெபிட் கார்டு, செக் புக், IMPS, ஸ்டாப் பேமெண்ட், சிக்னேச்சர் அட்டெஸ்டேஷன் போன்ற பல சேவைகளுக்கு சேவைக் கட்டணங்களில் மாற்றங்களை செய்துள்ளது.


ICICI Bank Announces Revision of Service Charges  What You Need to Know

கிராமப்புறங்களில் இருக்கும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 99 மற்றும் பிற இடங்களில் இருக்கும் டெபிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 200 ரூபாயும், ஒரு ஆண்டுக்கு சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.


25 செக் லீஃப்கள் கொண்ட செக் புக் பெற, எந்தவித கட்டணமும் இல்லை. ஆனால் அதற்குப் பிறகு நீங்கள் பெரும் செக் லீஃப்கள் ஒன்றுக்கு ரூ. 4 கட்டணமாக வசூலிக்கப்படும்.


டூப்ளிகேட் பாஸ்புக் பெற வேண்டும் என்றால் ரூ. 100 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும், உங்கள் பணப்பரிவர்த்தனைகளை புது பாஸ்புக்கில் அப்டேட் செய்ய கூடுதலாக ரூ. 25 ரூபாய் கட்ட வேண்டும்.


DD / PO - ரத்து செய்யும் பட்சத்தில் ஒரு முறைக்கு ரூ. 100 சேவை கட்டணமாக வசூலிக்கப்படும்.


இம்மிடியேட் பேமென்ட் சர்வீஸ்களில் ஒரு பரிவர்த்தனைக்கு, ரூ. 1000 என்றால், ரூ 2.50 சேவை கட்டணமும், ரூ 1000 முதல் ரூ 25,000 வரை, ரூ. 5 சேவை கட்டணமும், ரூ. 25,000 முதல் ரூ. 5,00,000 வரை, ரூ 15 சேவைக் கட்டணமும் வசூல் செய்யப்பட உள்ளது. சிக்னேச்சர் அட்டஸ்டேஷன்க்கு ரூ. 100 சேவை கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.


உங்கள் கார்டு தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ மாற்றி புது அட்டை பெற வாடிக்கையாளர் ரூ. 200 செலுத்த வேண்டும்.


வாடிக்கையாளர்களுக்கு ரயில்வே முன்பதிவுக்கான கட்டணங்கள் 1.8 % வசூலிக்கப்படும்.


சேவிங்ஸ் அக்கவுண்டுகளுக்கான சிக்னேச்சர் அட்டெஸ்டேஷன் பெற ரூ. 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


கேஷ் அக்செப்ட்டார் மற்றும் ரீசைக்கிளர் மெஷின்களில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு ரூ. 50 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவை வார நாட்களில் ஆறு மணி முதல் 8 மணி வரை மற்றும் விடுமுறை நாட்களில் டெபாசிட் செய்பவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.


டெபிட் கார்டு PIN ரீசெட் கட்டணங்கள்: NIL


டெபிட் கார்டு - ஹாட்லிஸ்டிங் கட்டணம்: NIL


அக்கவுண்ட் க்ளோசர் : NIL


பாஸ்புக்கில் முகவரி மாற்றும் கோரிக்கை: NIL


பேலன்ஸ் சர்டிபிகேட் இண்ட்ரஸ்ட் சர்டிபிகேட்: NIL


சமீபத்தில் யெஸ் பேங்க் மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் தங்களது சேவைக் கட்டணங்களை மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.


More From GoodReturns

வீட்டு கடன் ஈஎம்ஐ.. எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணனும்..!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations