(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!


 சென்னை: இன்றெல்லாம் உயில் எழுதி வைப்பது மிகவும் எளிதாகிவிட்டது. சில ஆன்லைன் தளங்கள் பயனர்களுக்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தனிநபர்கள் தங்கள் வீட்டில் இருந்தே உயில்களை எழுதி வைக்க முடியும். ஆன்லைன் உயிலை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றி இங்கே காண்போம்.


உயில் என்றால் என்ன?: உயில் என்பது ஒருவர் இறப்பதற்கு முன் தனது சொத்துகளைப் பிரித்து தனக்கு விருப்பமான நபருக்கு எழுதி வைக்கும் 'ஆவணம்' ஆகும். இதனை ஆங்கிலத்தில் "Will" என்று கூறுவார்கள். சொத்துக்களை வைத்திருக்கும் நபர் அதனை தனிநபருக்கோ அல்லது அறக்கட்டளைக்கோ எழுதி வைக்கலாம். இது அவரின் இறப்பிற்கு பிறகு, அந்த உயிலில் குறிப்பிடப்பட்டது போல் யாருக்கு பொய் சேர வேண்டுமோ அவர்களிடம் சேரும். எனவே, ஒரு உயிலை ஆன்லைனில் எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிப் பார்ப்போம்.



A Guide to Creating an Online Will

ஒரு தளத்தைத் தேர்ந்தெடுக்கவும்: இன்று அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், உயில் எழுத நம்பகமான ஆன்லைன் சேவையை கண்டறிய வேண்டும். மேலும் இந்த இணையதளங்கள் பாதுகாப்பானதா? மற்றும் HTTPS குறியீடு கொண்ட URL பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


ஆன்லைன் பதிவு: உயில் எழுதுபவரின் முழுப்பெயர், பிறந்த தேதி, முகவரி மற்றும் பிற விவரங்களைக் கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஆன்லைன் சேவையைப் பயன்படுத்த பாதுகாப்பான 'login' டீட்டைல்களை உருவாக்கி வைத்துக் கொள்ளவும். இது பிறகு உயிலில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டால் அதற்கு உதவும்.



சொத்து விவரங்களை என்டர் செய்யவும்: அடுத்து, சொத்துக்கள், முதலீடுகள், வங்கிக் கணக்குகள் மற்றும் உயில் எழுதுபவரின் மதிப்புமிக்க சொத்துகள் அனைத்தையும் ஒன்று விடாமல் பட்டியலிட வேண்டும்.


சொத்துக்கு தொடர்புடைய நபர்களை நியமிக்கவும்: உங்களுடைய சொத்துகளை யார் அனுபவிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களுடையப் பெயரில் சொத்துகளை ஒதுக்கலாம். நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு சொத்துக்களை ஒதுக்கும் வழிகளும் இந்த ஆன்லைன் தளங்களில் உள்ளது.


டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தவும்: உயில் எழுத பயன்படுத்தப்படும் ஆன்லைன் இணையத்தளங்கள் இன்பில்ட் டெம்ப்ளேட்களை வழங்குகின்றன. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு பிடித்த டிசைன் கொண்ட டெம்ப்ளேட்களைப் பயன்படுத்தி உயில் எழுத முடியும்.


மதிப்பாய்வு: நீங்கள் ஆன்லைன் மூலம் எழுதி வைத்த உயிலில் ஏதேனும் பிழைகள் இருந்தால் நீங்கள் திருத்திக் கொள்ளும் வகையில் டிராப்ட்களில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும். மேலும் தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்யப்படலாம்.


மேலும் சில சிக்கலான சூழ்நிலைகளில் சட்ட ஆலோசனையைப் பெறவும். மறுஆய்வுக்குப் பிறகு, சாட்சிகள் முன்னிலையில் டிஜிட்டல் முறையில் கையொப்பமிட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட உயில், ஆன்லைனில் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.


கவனிக்க வேண்டியவை: பாதுகாப்பான இணையதளத்தை தேர்வு செய்த பின்னரே உங்கள் சொத்து விவரங்களைப் பதிவிட வேண்டும். அனைத்தும் பூர்த்தியான பின் உங்கள் கும்பத்தில் உள்ள நபர்களிடம், நீங்கள் பயன்படுத்திய இணையதளம் மற்றும் பிற விவரங்களை தெரியப்படுத்துவது நல்லது.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations