(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..


 

கிரெடிட் (Credit card) மற்றும் டெபிட் கார்டு (Debit card) பயனர்களின் பாதுகாப்பை பலப்படுத்த ரிசர்வ் வங்கி இப்போது ஒரு முக்கியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விதிமுறைகளில் சில மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளாது.


கடந்த 2023-ம் ஆண்டின் இறுதி கணக்கு படி, சுமார் 970.74 மில்லியன் மக்கள் இந்தியாவில் டெபிட் கார்டு (debit card users) பயன்படுத்துகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியாவில் சுமார் 73 மில்லியன் பயனர்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துகொண்டே செல்கிறது. இதன் காரணமாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களின் பாதுகாப்பும் அதிகமாக பாதிப்படைந்து வருகிறது.



atm-debit-card-credit-card

உங்களிடம் ATM கார்டு.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கிறதா? (Do you have ATM card.. Debit card.. Credit Card):


ஆம் மக்களே, இந்தியாவில் உள்ள டெபிட் கார்டு பயனர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களின் பயன்பாடு எப்படி நாளுக்கு நாள் அதிகமாகிறதோ, அதேபோல, அதன் மூலம் உருவாகும் மோசடிகளின் எண்ணிக்கையும் தினம்-தினம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த மோசடி சிக்கல்களில் இருந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களை பாதுகாக்க, இந்திய ரிசர்வ் வங்கி இப்போது புதிய முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.


இதன் படி, புதிய டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாட்டு கொள்கைகளை அறிமுகம் செய்யவுள்ளதாக ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களின் தகவல்களை பேமெண்ட் நிறுவனங்கள் இப்போது வரை சேமித்து வைக்கின்றன. இந்த செயலை ரிசர்வ் வங்கி ஒட்டுமொத்தமாக முடக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.


அதாவது, உங்கள் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை இனி பேமெண்ட் நிறுவனங்கள் (Payment companies) சேமிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தவுள்ளது. டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை எளிமைப்படுத்தும் பிரத்தியேகமான புதிய தொழில்நுட்பத்தை ரிசர்வ் வங்கி உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்டு விபரங்களை மற்ற நிறுவனங்கள் சேமிக்காமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.



credit-debit-card-reserve-bank-india

இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ள புதிய விதிமுறை (Reserve Bank Of India Implements New Rules):


இதை கட்டாய விதியாக மாற்றம் செய்ய இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது வெளியான தகவலின் படி, இந்திய ரிசர்வ் வங்கி வரும் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்த புதிய டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விதியை அமல்படுத்தும் என்று கூப்பட்டுள்ளது. இந்த புதிய விதி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.


அதேபோல், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை பேமெண்ட் அக்ரிகேட்டர் நிறுவனங்களை முழுமையாக அணுக முடியாத படி ஒரு பாதுகாப்பான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பேமெண்ட் நிறுவனங்கள் எந்த தகவலைகளை சேமிக்கலாம் என்பதை பயனர் அங்கீகாரம் மூலம் மட்டுமே வழங்கப்படும்படியான ஒரு சேவையை ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிகிறது.


இந்த புதிய டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அமலுக்கு கொண்டு வந்த பிறகு, உங்களிடம் இருக்கும் கார்டு பற்றிய முழு தகவல்களை, கார்டு வழங்கிய நிறுவனம் மட்டுமே அறிந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மோசடிகளில் மக்கள் சிக்காமல் பாதுகாக்கப்படுவார்கள் என்று ரிசர்வ் வாங்கி கூறியுள்ளது.


More From GizBot

வீட்டுக்கே ATM சேவை.. இனி வாசலுக்கு பணம் வரும்.. ஆதார் கார்டுல



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations