(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

நீட் தேர்வுக்கான சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியீடு NEET UG 2024: நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும்


 

தேசிய தேர்வு முகமை இன்று நீட் தேர்வுக்கான (NEET UG) சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கான சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியிடப்பட்டதும், பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் neet.ntaonline.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியிடப்பட்டவுடன், தேசிய தேர்வு அனுமதி அட்டைகளையும் வெளியிடும்.



இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை, இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான மொத்த பதிவுகளின் எண்ணிக்கையில் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. மொத்தம் 23,81,833 மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர், அதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 24 'மூன்றாம் பாலினத்தவர்கள்' பதிவு செய்துள்ளனர். பதிவுசெய்யப்பட்ட 23 லட்சம் மாணவர்களில், 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் OBC NCL, 6 லட்சம் பொது பிரிவு மாணவர்கள், 3.5 லட்சம் பேர் பட்டியல் சாதி (SC) மாணவர்கள், 1.8 லட்சம் மாணவர்கள் Gen-EWS பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1.5 லட்சம் மாணவர்கள் பழங்குடி (ST) பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.



இந்தநிலையில், நீட் தேர்வு நடைபெறும் நகரம் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியிடப்பட்டால், தேர்வு நடைபெறும் நகரத்தைத் தெரிந்துக்கொண்டு மாணவர்கள் அதற்கு ஏற்ப தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம். அதேநேரம் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வுக்கு 4 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் மற்றும் ஹால் டிக்கெட்களை சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். பதிவிறக்கம் செய்ய விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் கடவுச்சொல் போன்ற சான்றுகளைப் பயன்படுத்த வேண்டும்.


நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பில் விண்ணப்பதாரரின் பெயர், பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மற்றும் பாடங்கள் மற்றும் அவர்களின் குறியீடுகள் இருக்கும். அவற்றை முறையாகச் சரிபார்க்குமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations