(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

பொறியியல் சேர்க்கைக்கு தயாராகும் உயர்கல்வித் துறை: உயர்மட்ட குழு அமைத்து ஏற்பாடு


2024-2025 ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைகளை நடத்துவதற்கு மாநில உயர்கல்வித் துறை (HED) உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது.

25 Apr 2024 10:20 IST

author-image

Listen to this article



2024-2025 ஆம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைகளை நடத்துவதற்கு மாநில உயர்கல்வித் துறை (HED) உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து ஏற்பாடுகளை செய்கிறது. அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு, பொறியியல் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங் அமர்வுகளுக்கான விரிவான அட்டவணையை வெளியிடும்.


ஒவ்வொரு ஆண்டும், உயர்கல்வித் துறைன் பிரிவான தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE), தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைகளை (TNEA) அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அதன் 450 இணைப்புக் கல்லூரிகளின் பங்கேற்புடன் நடத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்கிறார்கள்.



விண்ணப்பங்களை பதிவு செய்தல், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தல், சான்றிதழ் சரிபார்ப்பு, பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ரேண்டம் எண்களை வழங்குதல், ரேங்க் பட்டியல் வெளியீடு, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், பொது கவுன்சிலிங், தொழிற்கல்வி ஆலோசனை, துணை கவுன்சிலிங், SCA முதல் SC வரையிலான கவுன்சிலிங், போன்ற அனைத்து சேர்க்கை தொடர்பான செயல்பாடுகள் 2020-2021 முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. 


TNEA 2024-25 முற்றிலும் ஆன்லைனில் செய்யப்படும் என்று DOTE-ன் மூத்த அதிகாரி கூறினார். அவர் மேலும் கூறுகையில், “12-ம் வகுப்பு முடிவுகள் வந்தவுடன் TNEA செயல்முறை விரைவில் தொடங்கும் என்பதால், விண்ணப்பங்களை பதிவேற்றுவது குறித்த விரிவான அறிக்கையை குழு தயாரிக்கும். கவுன்சிலிங் முடியும் வரை முழு TNEA செயல்முறையையும் குழு கண்காணிக்கும்”என்று அவர் கூறினார்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“



 

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations