(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

மதுரையில் இருந்து ஜபல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில்


 கோடைகால விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்க மத்திய பிரதேச மாநில முக்கிய நகரான ஜபல்பூரில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரெயில் இயக்க மேற்கு மத்திய ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஜபல்பூர்-மதுரை வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.02122) ஜபல்பூரில் இருந்து ஏப்ரல் 18, 25-ந்தேதி, மே 2, 9, 16, 23, 30-ந்தேதி, ஜூன் 6, 13, 20, 27-ந்தேதி, ஜூலை 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைேதாறும் மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 12.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.



மறு மார்க்கத்தில் மதுரை-ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.02121) மதுரையில் இருந்து ஏப்ரல் 20, 27-ந்தேதி, மே 4, 11, 18, 25-ந்தேதி, ஜூன் 1, 8, 15, 22, 29-ந்தேதி, ஜூலை 6, 13, 20, 27-ந்தேதி ஆகிய தேதிகளில் சனிக்கிழமைதோறும் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.40 மணிக்கு ஜபல்பூர் சென்றடையும்.


இந்த ரெயில்கள் நயின்பூர், பாலாகாட், கோன்டியா, நக்பிர், பலார்ஷா, விஜயவாடா, கூடூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations