(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?


 Published: Saturday, April 20, 2024, 12:15 [IST]

இந்தியாவில் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த யுபிஐ செயலிகளின்மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது.


இதுதவிர கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகள் பல்வேறு புதிய சேவைகளை வழங்கிவருகிறது. அதேபோல் கூகுள் பே (Google Pay) செயலி ஆனது கடன் வழங்கும் சேவையைச் செய்துவருகிறது. இதுகுறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.


google-pay

அதாவது கூகுள் பே செயலி ஆனது Sachet loan என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த Google Pay Sachet Loans திட்டத்தின் மூலம் சிறு வியாபாரிகள் ரூ.15,000 வரை கடன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Sachet loanஎன்றால் என்ன பலருக்கும் கேள்வி வரும். அதற்கான பதிலை இங்கே பார்க்கலாம்.


அதாவது Sachet loan என்பது சிறிய வகை லோன்கள் ஆகும். குறிப்பாக இதிலிருந்து பெறப்படும் கடனை 7 நாள் முதல் 12 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் இது குறுகிய கால நிதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் அம்சமாகும்.



குறிப்பாக கடன் வழங்கும் துறையில் விரிவடைந்து வரும் ஃபைன்டெக் தாக்கத்தால் கடன் செயல்முறை மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வங்கிகளைப் போல கடுமையான டாகுமெண்ட் சரிபார்ப்பு போன்றவை இல்லாமல் விரைவில் கடன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


google-pay

மேலும் கூகுள் பே வழங்கும் இந்த கடன் ஆனது அவசர மருத்துவ பில்கள் அல்லது பிற செலவுகள் என எதிர்பாராத செலவுகளுக்குப் பணம் தேவைப்படும் போது இந்த வகை கடன்கள் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் இந்த கடனை பெற விரும்பும் பயனர்களுக்கு 18 வயதுக்கும் மேல் இருக்க வேண்டும். மொபைல் எண், ஆதார், பான்கார்டு போன்றவை கட்டாயம். மேலும் விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் 750-க்கும் குறைவாக இருக்கா கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.


எப்படி வாங்குவது? கூகுள் பே வழங்கும் இந்த கடனை எப்படி வாங்குவது என்று பார்க்கலாம். அதாவது முதலில் Google Pay Business செயலியைப் பதிவிறக்கம் செய்யவேண்டும். அதன்பின்னர் google Pay for Business செயலியின் கடன் பகுதிக்குச் சென்று ஆஃபர்ஸ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


google-pay

அடுத்து உங்களுக்குத் தேவைப்படும் கடன் தொகையை உள்ளிட்டு தொடரவும். அடுத்து google pay வைத்துள்ள வங்கி தளத்திற்குச் சென்றதும் கேஒய்சி(KYC)) உட்பட சில படிகளை முடித்த பின்னர் உங்களுக்குக் கடன் கிடைக்கும். மேலும் உங்களது CIBIL Score நன்றாக இருப்பின் கண்டிப்பாக உங்களுக்கு இந்த கடன் உடனடியாக கிடைக்கும்.


அதேபோல் சமீபத்தில் பேடிஎம் நிறுவனத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால், தற்போது கூகுள் பே, போன்பே போன்ற செயலிகளைத் தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றர். அதுவும் கூகுள் நிறுவனம் தனது கூகுள் பே செயலியில் பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கூகுள் பே செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது. எனவே தான் இந்த கூகுள் பே செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.


More From GizBot

Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations