(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

TNPSC வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

 TNPSC குரூப் 1பி, 1சி தேர்வு அறிவிப்பு; தமிழ்நாடு அரசில் உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் வேலை; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர், பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய பதவிகள் அடங்கிய குரூப் 1பி, குரூப் 1சி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 29 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவி ஆணையர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 39 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 22

மாவட்ட கல்வி அலுவலர்

author-image

WebDesk

 Follow Us

 TN minister thangam thennarasu On  TNPSC Group 2 and 2A Result Tamil News 

TNPSC தேர்வு அறிவிப்பு

Listen to this article

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையர், பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய பதவிகள் அடங்கிய குரூப் 1பி, குரூப் 1சி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 29 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவி ஆணையர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினர் 39 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : நிலை – 22

மாவட்ட கல்வி அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC-DNC, MBC, BC and BCM பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

சம்பளம் : நிலை - 23

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இதில் 175 வினாக்கள் பொது அறிவு பகுதிகளில் இருந்தும், 25 வினாக்கள் கணிதப் பகுதியிலிருந்தும் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

முதன்மைத் தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்வில் 40 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

அடுத்த மூன்று தாள்களும், பொது அறிவு மற்றும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் சார்ந்தவை. ஓவ்வொரு தாளும் தலா 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு தலா 3 மணி நேரம். 

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர். நேர்முகத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : முதல்நிலைத் தேர்வு ரூ.100, முதன்மைத் தேர்வு ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2024

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations