(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

கோட்டக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர் சேர்க்க, கிரெடிட் கார்டு வழங்க RBI தடை.. பணத்திற்கு பாதிப்பா?


 இந்தியாவில் இருக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் வரையில் ஆர்பிஐ தனது தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளது. ஆர்பிஐ மற்றும் வங்கி சட்டங்களை மீறி செயல்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டால் அதிகப்படியான அபராதம் அல்லது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குவது இல்லை.


ஆர்பிஐ கையில் சிக்குனா சின்னாபின்னம் என்ற கணக்கில் பெரிய வங்கி, சிறிய வங்கி என வித்தியாசமில்லாமல் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறி செயல்பட்டது மூலம் எதிர்கொண்ட பிரச்சனைகளை மக்கள் அனைவரும் பார்த்த நிலையில் தற்போது கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு அதிரடி உத்தரவு வந்துள்ளது.



Kotak Mahindra Bank barred from adding new customers via mobile and online channels and issue credit cards - RBI

கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ரிசர்வ் வங்கியின் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது, தற்போது வெளியாகியுள்ள தகவல் படி புதிய வாடிக்கையாளர்கள் சேர்க்க மற்றும் கிரெடிட் கார்டு வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


ஆர்பிஐ உத்தரவில் கோட்டக் மஹிந்திரா வங்கி அடுத்து உத்தரவு வரும் வரையில் இவ்வங்கி புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் மற்றும் மொபைல் வங்கி சேனல்கள் வழியாக சேர்க்க கூடாது, மேலும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.


கோட்டக் மஹிந்திரா வங்கியின் டெக் தளத்தில் கண்காணிப்பு தொடர்பான் பிரச்சனைகளை காரணம் காட்டி இந்த உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் ஆர்பிஐ கடந்த 2 வருடமாக இவ்வங்கியின் ஐடி தளத்தை ஆய்வு செய்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


தனியார் கடன் வழங்குநரான கோட்டக் மஹிந்திரா வங்கி கடந்த 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்த நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைப்பிடிக்க தவறியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கியின் இந்த தடை தற்போது இவ்வங்கி வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்விதமான பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கை, கோட்டக் மஹிந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும். காரணம் இவ்வங்கி தனது பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும், மொபைல் சேவை வாயிலாக தான் பெறுகிறது. ரிசர்வ் வங்கி கடந்த 2 வருடமாக இதுக்குறித்து அறிவுறுத்தி வந்த வேளையிலும், கோட்டாக் மஹிந்திரா பிரச்சனையை சரிசெய்யவில்லை. இதை தொடர்ந்து ஆர்பிஐ தடை விதித்துள்ளது.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations