(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

அதிக பணமில்லை.. மின்சாரம் தேவையில்லை.. இயற்கையான AC.. இந்தியாவை கவரும் சூப்பர் களிமண் குழாய் கூலிங் சிஸ்டம்..


 மின்சாரம் தேவை இல்லை, அதிக பணம் தேவையில்லை, சுற்றுசூழலுக்கு எந்தவித பாதிப்புமில்லை, இயற்கையான முறையில் உங்கள் வீட்டை ஏசி போட்டது போல மாற்றும் களிமண் குழாய் கூலிங் ஏசி தொழில்நுட்பம் (clay-pipe cooling AC technology) இப்போது இந்தியாவில் அதிகரிக்க துவங்கியுள்ளது.


அதிக செலவின்றி (Low cost), மின்சார தேவையும் இல்லாமல் (No current AC), உங்கள் வீட்டை உஷ்ணத்தின் பிடியில் இருந்து குளிர்விக்க முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் மக்களே.! வந்துவிட்டது புதிய களிமண் குழாய் கூலிங் ஏசி தொழில்நுட்பம். இந்த கூலிங் சிஸ்டம் இயற்கையான (Natural cooling system) முறையில், எந்தவித சுற்றுப்புற பாதிப்பையும் ஏற்படுத்தாமல், பாதுகாப்பான குளிர்ந்த காற்றை உங்கள் வீட்டிற்குள் அனுபவிக்க இது அனுமதிக்கிறது.


cooling-system-ac-clay-pipe

களிமண் குழாய் கூலிங் சிஸ்டம் ஏசி (Clay pipe cooling system AC):


எல்லோராலும் இப்போது ரூ.20,000 அல்லது ரூ.50,000 செலவு செய்து ஏசி (AC) வாங்க முடிவதில்லை. இருப்பினும், ஏசிக்கு மாற்றான தொழில்நுட்பங்களை மக்கள் ட்ரை செய்து பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வரிசையில், இப்போது மக்களின் ஆதரவை பெற்று, இந்தியா முழுக்க ஹை-டிமாண்ட் உடன் ட்ரெண்டில் இருக்கும் ஒரு சூப்பர் நேச்சுரல் ஏசி (Super natural AC) தொழில்நுட்பம் தான், களிமண் குழாய் கூலிங் சிஸ்டம் (Clay pipe cooling system).


ஆம், களிமண் குழாய்கள் (Terracotta pipes) மூலம் உங்கள் வீட்டை நீங்கள் குளிர்விக்க முடியும். இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொள்ள, உங்கள் வாயை (mouth) நீங்கள் கொஞ்சம் திறக்க வேண்டும். உங்கள் வாயை அகலமாக விரித்துக்கொண்டு, உங்கள் வாய் முன் கையை வைத்து, காற்றை வெளியில் ஊதிப் பாருங்கள், உங்கள் வாயில் இருந்து வரும் காற்று சூடாக உங்கள் கையில் படும்.


அதேபோல், உங்கள் வாயைக் குறுகலாக வைத்துக்கொண்டு, காற்றை ஊதிப்பாருங்கள், இப்போது காற்று சில்லென்று வரும். இந்த அடிப்படை கான்செப்டில் தான் இந்த களிமண் குழாய் ஏசி (clay pipe AC) வேலை செய்கிறது. இந்த ஐடியாவை வைத்து, இந்த களிமண் குழாயின் ஒருபக்க வாய் அகலமான வடிவமைப்பை பெற்றுள்ளது. இது உங்கள் வீட்டின் ஜன்னலுக்கு (Window) வெளியில் இருக்கும் படி பொருத்தப்பட வேண்டும்.


clay-pipe-cooling-ac-india-details

ஏசி போல சில் காற்று வேண்டுமா? அப்போ இதை தான் நீங்கள் செய்ய வேண்டும்:


இந்த களிமண் குழாயின் மற்றொரு வாய் பகுதி, குறுகலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி, உங்கள் வீட்டின் ஜன்னலுக்கு உள்பக்கம் வருவது போல பொருத்தப்பட வேண்டும். இப்படி ஓவ்வொரு களிமண் குழாய் மீதும், ஒவ்வொரு குழாய்யாக அடுக்கி உங்கள் ஜன்னல் ஏரியாவை மூடவும். அவ்வளவு தான், இனி வெளியில் இருந்து உங்கள் வீட்டிற்குள் நுழையும் காற்று இனி தானாக ஜில் என்று மாறி, உங்கள் வீட்டின் உஷ்ணத்தை குறைத்துவிடும்.



இது மின்சாரம் இல்லாமல் வீட்டை குளுமைபடுத்தும் விதமாகும். ஏசி போன்ற ஜில் காற்றை பெற வேண்டுமென்றால், இத்துடன் நீங்கள் மற்றொரு சிறிய வேலையை செய்ய வேண்டும். அடுக்கப்பட்ட களிமண் குழாய்களின் மேற்பகுதியில் இருந்து தண்ணீர் (Water) விழும்படி, ஒரு டியூபை (Tube) பதித்துவிட்டால், தண்ணீரில் களிமண் குழாய்கள் ஊறி, குழாய் வழியாக வரும் காற்று அதிகப்படியான குளுமையை பெற்று ஸ்ப்ளிட் ஏசி (Split-AC) போட்டது போல் உங்கள் வீட்டை மாற்றிவிடும்.


இப்படி செய்வதன் மூலம், தண்ணீரில் ஊறியுள்ள குழாய்கள் வழியாக வெப்பமான காற்று உள்ளே வரும்போது, எவாபரேட்டிவ் கூலிங் (Evaporative cooling) என்ற தொழில்நுட்பத்தின் படி காற்றின் வெப்பம் குறைக்கப்பட்டுக் குளிர்ந்த காற்றாக வீட்டினுள் வந்து சேரும். அதாவது, சூடான காற்று அந்த ஈரமான குழாய் வழியாக வரும்போது அதில் இருக்கும் அதீத வெப்பம் ஆவியாக்கப்பட்டுவிடும். இதன் காரணமாக ஏசி போன்ற காற்று உங்கள் வீட்டிற்குள் வந்துசேரும்.


குழாய்களை ஈரப்படுத்தப் பயன்படுத்தப்படும் நீரை ஒரு சிறிய மோட்டார் (Motor) பயன்படுத்திச் சுழற்சி முறையில் மீண்டும் மேலிருந்து வடிவது போல செய்தால், தண்ணீர் செலவை குறைக்கலாம். ஆனால், இதற்கு சிறிதளவு மின்சக்தி தேவை என்பதை நினைவில்கொள்ளவும். ஆனால், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் ஏசி சாதனம் பயன்படுத்தும் அளவிற்கு மின்சக்தி தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஏசி வாங்கும் அளவிற்கு அதிக செலவும் இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதில்லை.


இந்தக் களிமண் குழாய்களை வெறுமென பயன்படுத்தி சுமார் 6 முதல் 10 டிகிரி வரை உங்கள் வீட்டின் வெப்பத்தை குறைக்கலாம். தண்ணீர் உடன் களிமண் குழாய்யை பயன்படுத்தும் பொழுது 15 டிகிரி வரை வெப்பத்தை குறைக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இயற்கைக்கு பாதிப்பு இல்லாமல், இயற்கையோடு சேர்ந்து வாழ மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் இந்த களிமண் குழாய் ஏசி.


More From GizBot

வெறும் ரூ.499 போதும்.. மினி ஏசி.. போர்ட்டபிள் டிசைன்.. கரண்ட் பில் கவலை இருக்காது.. வீட்டுக்கு 1 வாங்கலாம்..



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations