(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருக்கலாம்.. ஆஹா! இது தெரியாம போச்சே..!


 நம் நாட்டில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு கண்டிப்பாக வங்கி கணக்கு அவசியமாகிறது. பணத்தை டெபாசிட் செய்வது முதல் பணத்தை எடுப்பது வரை அனைத்திற்கும் வங்கி கணக்கு மிக முக்கியம்.


How many bank accounts a person can open in India

என்னதான் ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் அதிகரித்தாலும் அவற்றைப் பயன்படுத்தவும் வங்கி கணக்கு தேவை. முன்பெல்லாம் இரண்டு, மூன்று வங்கி கணக்குகளை வைத்திருக்கும் நபர்கள் அந்தந்த வங்கிகளுக்கு சென்று பணப்பரிவர்த்தனைகளை செய்ய வேண்டி இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருந்தால், அவர்கள் தங்களுடைய ஆன்லைன் பேமெண்ட் தளங்களில் அவற்றை இணைத்துக் கொள்ளலாம். எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் இணைக்கும் வசதியுடன் அவை இருப்பதால் பயன்படுத்துபவருக்கு எளிமையான ஒன்றாக இருக்கிறது.



ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளைத் திறக்கலாம்: நம்மில் பலருக்கு ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளைத் திறக்க முடியும் என்பது பற்றிய சந்தேகம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள நபர்கள் எத்தனை வங்கி கணக்குகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதற்கு என தனிப்பட்ட வரம்புகள் எதுவும் இல்லை. ரிசர்வ் வங்கியும் இதுபோன்ற வங்கி கணக்குகள் குறித்த வரம்புகளை நிர்ணயிக்கவில்லை.


சிலர் பள்ளி படிக்கும் போது குறிப்பிட்ட பேங்கில், கணக்கினை வைத்திருப்பர். வேலைக்கு சென்ற பின் அந்த நிறுவனத்தில் சேலரி பிராசஸிங்கிற்கு இன்னொரு பேங்கில் அக்கவுண்ட்டை திறந்து இருப்பார். இதுபோன்ற காரணங்களால் ஒருவருக்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கும்.


உங்களின் தேவைக்காக ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியே பயன்படுத்தாமல் விட்டு விடுவது, உங்களுக்கு பிற்காலத்தில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் நிதி இழப்பு அபாயம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.


இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்க வரம்புகள் எதுவும் இல்லை என்றாலும், அவற்றை சரிவர பராமரிக்க வேண்டும். ஏனென்றால், பயன்படுத்தாத அக்கவுண்ட்களின் மூலம் மோசடிகள் அதிகம் நடப்பதாக ஆர்பிஐ எச்சரித்துள்ளது.


ஆனால் எல்லாவற்றிற்கும் முன் பயன்படுத்தாத கணக்குகளுக்கு, வங்கிகள் உங்களிடம் இருந்து அபராதத்தை வசூலிக்கும். மேலும் ஹேக்கர்கள் இதுபோன்ற பயன்படுத்தாத வங்கிக் கணக்குகளையே குறிவைத்து மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் யாரோ ஒருவர் செய்த தவறுக்கு நீங்கள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.


எனவே, ஒரு வங்கி கணக்கினை திறப்பதற்கு முன் உங்களுக்கு உண்மையாகவே தேவைப்படுகிறதா? என்பதை புரிந்து கொண்டு செயல்படவும். மேலும், ஏதேனும் கணக்குகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றை வங்கிக்கு சென்று உடனே டிஆக்டிவேட் செய்து கொள்ளவும்.


More From GoodReturns

 ஹோம் லோன் வாங்க போறீங்களா? இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க..!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations