Advertisement

Responsive Advertisement

10,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கக்கூடிய 6 அசத்தல் தொழில்கள்.. இனி செமயா சம்பாதிக்கலாம்!


 சென்னை: ஒருவர் சொந்த தொழில் முயற்சியில் வெற்றி பெற என்ன தேவை என்று நினைக்கீறீர்கள்? தனித்துவமான யோசனை மற்றும் சரியான முதலீடு இவை இரண்டும் இருந்தாலே போதுமானது. சிலருக்கு மிகப்பெரிய அளவிலான தொழிலை தொடங்க வேண்டும் என்ற யோசனை இருக்கும். அனால் போதுமான முதலீடு இருக்காது. இது போன்ற நபர்களாக நீங்கள் இருந்தால் வெறும் ரூ.10,000-க்கு குறைவான முதலீட்டில் சில தொழில்களைத் தொடங்கலாம். அவை என்னென்ன தொழில்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.


ஊறுகாய் வியாபாரம்: ரூ.10,000 முதலீட்டில் தங்களுடைய ஸ்டார்ட் அப் தொழிலை தொடங்க விரும்புபவர்கள், ஊறுகாய் வியாபாரத்தை தேர்வு செய்யலாம். இந்தியாவில் ஒவ்வொரு வகையான உணவுக்கும், வெவ்வேறு வகையான ஊறுகாய் மற்றும் சட்னிகள் உள்ளன. பல வகையான ஊறுகாய்களை தயாரிப்பது எளிதான காரியம் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


business idea

இதனால் தான் நம்மில் பலர் சொந்தமாக தயாரிப்பதை விட நமக்கு பிடித்த வகை ஊறுகாய்களை கடையில் வாங்கி உபயோகிக்கிறோம். இந்த தொழிலைத் தொடங்க உங்களுக்கு தேவையானது சில மூலப் பொருட்கள் மட்டும்தான். அவற்றில் மிளகாய், மாங்காய், பூண்டு, எண்ணெய், கடுகு, வெந்தயம் போன்றவை இருந்தாலே இந்த தொழிலை எளிதில் தொடங்கலாம். சரியான செயல்முறை மற்றும் சிறந்த பேக்கேஜ் ஆகியவற்றை கருத்தில் கொண்டால் நல்ல லாபத்தை பெற முடியும்.


பிளாகிங் (Blogging): தற்போது பிளாகிங் என்பது பலரின் விருப்பமாக மாறிவிட்டது. பிளாகிங் தொடங்க ஒருவர் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெரிய பெரிய பிராண்டுகள் மற்றும் நிறுவனங்களும் கூட ப்ளாகர்களை பணியமர்த்துகின்றன. இந்த நிறுவனங்களுக்கான சுவாரசியமான வீடியோக்கள் மற்றும் போஸ்ட்களை நிர்வகிக்க இது உதவுகிறது. எனவே நீங்கள் கண்டெண்டுகளை உருவாக்கக்கூடிய பிளாகிங்கை தேர்வு செய்யலாம்.



யோகா வகுப்புகள்: இந்த வேகமான உலகில், மக்களுக்கு போதுமான நேரமில்லை. ஆனால் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிகளைத் தேடுகின்றனர். எனவே நீங்கள் யோகா வகுப்புகளை நடத்தலாம். யோகா தற்போது மக்களிடையே பிரபலமடைந்து வருகிறது. வீட்டில் இருந்து அல்லது சமூக வலைத்தளம் மூலமாக நீங்கள் பிறருக்கு யோகா வகுப்புகளை எடுக்கலாம்.



டிபன் சர்வீஸ்: 10,000-திற்க்கு கீழ் தொழில் தொடங்க விரும்புவோருக்கு, டிபன் சேவை சிறந்த தேர்வாக இருக்கும், குறிப்பாக பெண்களுக்கு. இப்போதெல்லாம் பெரும்பாலான தம்பதிகள் வேலை செய்கின்றனர். இதனால் அவர்களால் தங்களுக்கு தேவையான உணவை சமைக்க முடிவதில்லை. ஆரோக்கியமான உணவை உண்பதை உறுதி செய்வதற்காக, மக்கள் நல்ல டிபன் கடைகளைத் தேடுகின்றனர். எனவே உங்கள் சொந்த சமையலறையில் இருந்தே நீங்கள் இதுபோன்ற டிபன் கடைகளைத் தொடங்கலாம். டிபன் கடைகள் மட்டுமின்றி இயற்கையாக விளையும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பிற உணவுகளையும் சமைத்து விற்பனை செய்யலாம்.


ஆன்லைன் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்: வேலைப்பளு காரணமாக பலரால் வெளியில் சென்று உடற்பயிற்சி செய்வதற்கு முடியாமல் இருக்கின்றனர். இதனால் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தும் பயிற்றுவிப்பாளர்களை தொடர்ந்து மக்கள் தேடுகின்றனர். இதன் விளைவாக ஆன்லைன் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளருக்கான தேவை அதிகரித்துள்ளது. உங்களுக்கு இது போன்ற உடற்பயிற்சியில் ஆர்வம் இருந்தால் ஆன்லைனில் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தலாம்.



பேக்கிங்: கேக் செய்வதில் ஆர்வமுள்ள நபர்கள் பேக்கிங் தொழிலை கையில் எடுக்கலாம். பேக்கிங் செய்வதற்கு ஓவன் இருந்தால் போதுமானது. விதவிதமான கேக்குகளை செய்வதில் ஆர்வமுள்ள நபர்கள் வீட்டிலிருந்து ஹோம் மேட் கேக்குகளை (Home made cake) விற்பனை செய்யலாம். தற்போது இந்த ஹோம் மேட் கேக்குகளுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது.


சமோசா விற்றே கோடீஸ்வரர் ஆன கதை.. பானி பூரி விற்றே ஒரு நாளைக்கு 5000 ரூபாய் சம்பாதிப்பவர் என்று பல பேரின் கதைகளை பற்றி நாம் கேட்டிருப்போம். இவர்கள் எல்லோரும் முதலில் ஒரு சிறு தொழிலில் இருந்து தான் தங்களுடைய வெற்றி பயணத்தை தொடங்கி இருப்பார்கள். எனவே உங்கள் முதலீடு சிறியதாக இருக்கிறது என்று நினைத்து கவலைப்படாதீர்கள். சிறிய முதலீடு கூட நாளை உங்களை பெரிய கோடீஸ்வரராக மாற்றலாம் என்பதை உணருங்கள்.


More From GoodReturns

ரூ.1.5 கோடி வேலையை உதறிவிட்டு விவசாயி ஆன 24 வயது சாப்ட்வேர் இன்ஜினியர்..!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations