Advertisement

Responsive Advertisement

வருமான வரித் துறை எச்சரிக்கை: வங்கிக் கணக்கு வேலிடேட் செய்யாவிட்டால் வரி ரீபண்ட் கிடைக்காது..!!


 சென்னை: மாத சம்பளக்காரர்கள் அனைவரும் கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் பணிகள் துவங்கியிருக்கும் வேளையில், நாட்டில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு மத்திய வருமான வரித் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.


தற்போது வருமான வரி தாக்கல் செய்வோர் சில முக்கியமான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர், இதைக் கவனித்த வருமான வரித்துறை இதற்கு முக்கியமான விளக்கம் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் வங்கிக் கணக்கு சரிபார்க்கப்படாமல் வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தால் வரி ரீபண்ட் கிடைக்காது எனத் தெரிவித்துள்ளது.



Income Tax  tax

அதாவது உங்கள் வங்கிக் கணக்கு சரிபார்க்கப்படவில்லை (non-validation) அல்லது மீண்டும் சரிபார்க்கப்படவில்லை (re-validation) என்ற காரணத்தால் உங்களுடைய டாக்ஸ் ரீபண்ட் கிடைப்பது தடைப்பட்டிருந்தால், உங்கள் வங்கிக் கணக்கை மீண்டும் சரிபார்க்கவோ வேண்டும்.


வங்கிக் கணக்கை வேலிடேட் செய்த உடன் மீண்டும் ஒரு முறை டாக்ஸ் ரீபண்ட் பெற Refund Reissue Request கோர வேண்டும், இதை மறக்காமல் செய்துவிடுங்கள். இதனால் validation செய்த உடன், ரீபண்ட் மீண்டும் கோருவது மிகவும் அவசியமானதாகும், இதை செய்ய தவறினால் ரீபண்ட் தொகை கிடைக்காது என வருமான வரித்துறை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.


வருமான வரித் துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், வரி செலுத்துபவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிப்படுத்தவும், தேவைப்பட்டால் அவற்றை மீண்டும் சரிபார்க்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.


மேலும், வங்கிக் கணக்கு சரிபார்க்கப்பட்ட பிறகு, ரீபண்ட் தொகையை மீண்டும் பெறுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.



உங்கள் வருமான வரி அறிக்கையை, வருமான வரித் துறையின் இணையதளம் (https://www.incometax.gov.in/iec/foportal/) வழியாகச் சரிபார்க்கலாம். அப்போது உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்படவில்லை அல்லது மீண்டும் சரிபார்க்கப்படவில்லை எனக் காட்டினால், மேலே கொடுக்கப்பட்ட வழிமுறையைப் பாலோ செய்ய வேண்டியது அவசியமானதாக உள்ளது.


More From GoodReturns

 வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு! இந்த டெட்லைன் போச்சுதுன்னா அவ்வளவுதான்.. ரொம்ப முக்கியம்!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations