(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

ஜிமெயில் எப்படி பணம் சம்பாதிக்கிறது என்று தெரியுமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!


 சென்னை: நம் அனைவருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது Email என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிற மின்னஞ்சல். இதனை வழங்கும் நிறுவனங்களில் மிகவும் பிரபலமானது தான் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் (Gmail). இது இலவச சேவையாக இருந்தாலும், ஜிமெயில் எப்படி பணம் சம்பாதிக்கிறது என்று சிந்தித்திருக்கிறீர்களா? இதோ அதற்கான விளக்கம்.


விளம்பரங்கள்: சுமார் 1.8 பில்லியன் ஆக்டிவ் யூஸர்களுடன் உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் ஈமெயில் சர்வீஸ்களில் ஜிமெயிலும் ஒன்று. பொதுவாக ஜிமெயில் நேரடியாக நம்மிடம் இருந்து பணம் வசூலிப்பதில்லை. ஆனால், மறைமுகமாக விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கிறது. எப்படி என்றால், நாம் ஜிமெயில் பயன்படுத்தும் போது, "சமூக" (Social) மற்றும் "விளம்பரங்கள்" (Promotions) என்ற பிரிவுகளையும் காணலாம். இங்கு தான் விஷயம் இருக்கிறது. இந்த பிரிவுகளில் காணப்படும் செய்திகள் தான் விளம்பரங்கள். இதன் மூலம் கூகுள் கணிசமான வருமானம் பெறுகிறது.



Gmail  Google Ads  technology

நாம் எதையாவது தேடும்பொழுது, அதற்குத் தொடர்புடைய விளம்பரங்களைக் கூகுள் காட்டுவது போலவே, ஜிமெயிலிலும் இயங்குகிறது. நாம் இந்த விளம்பரங்களைக் கிளிக் செய்யும் போதோ, அல்லது இந்த விளம்பரங்கள் நம் பார்வைக்குத் தென்படும் போதோ கூகுள் பணம் சம்பாதிக்கிறது. இதுவே ஜிமெயிலின் முதன்மை வருமான ஆதாரம்.


ஜிமெயில் சப்ஸ்க்ரிப்ஷன்: ஜிமெயில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இலவசமாக இருந்தாலும், வணிக நிறுவனங்களுக்காக G Suite என்ற கட்டண சேவையை வழங்குகிறது. இதில் தனிப்பயனாக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள், அதிக ஸ்டோரேஜ், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் போன்ற வசதிகள் கிடைக்கும். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக G Suite சந்தாவைப் பெறுகின்றன. இதன் மூலமாகவும் வருமானம் கிடைக்கிறது.



கூகுள் ஒன்: இது ஜிமெயிலுக்கான பிரீமியம் சேவையாகும். கூகுள் ஒன் மூலம், நீங்கள் கூடுதல் ஸ்டோரேஜ் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றைப் பெறலாம். மக்கள் அதிக ஸ்டோரேஜிற்காகவோ அல்லது கூடுதல் அம்சங்களுக்காகவோ கூகுள் ஒன்னைப் பயன்படுத்தும் போது, கூகுள் பணம் சம்பாதிக்கிறது. கூகுள் ஒன் 100 GB முதல் 2 TB வரையிலான பிளான்களுக்கு மாதத்திற்கு ரூ. 160 முதல் ரூ. 650 வரை கட்டணம் வசூலிக்கிறது.


கூகுள் மொத்த வருவாயில் ஜிமெயிலின் சரியான வருமானம் குறித்த விவரங்கள் தெரியவில்லை. அனால், 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 149 பில்லியன் வருவாய் பெற்றுள்ளது. இலவச ஜிமெயில் சேவை மூலம் கூகுள் நேரடியாக பணம் வசூலிக்காவிட்டாலும், விளம்பரங்கள், கூகுள் ஒன் போன்றவற்றில் இருந்து கூகுள் பணம் சம்பாதிக்கிறது. இது, நமக்கு இலவச மின்னஞ்சல் சேவையை வழங்க கூகுளுக்கு உதவுகிறது.


More From GoodReturns

Gemini AI சேவையில் என்னதான் பிரச்சனை..?! கூகுள்-ஐ வறுத்தெடுக்கும் எலான் மஸ்க்..!!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations