(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் தொலைஞ்சு போச்சா.. அபராதம் எவ்வளவு? இதையும் தெரிஞ்சுக்கோங்க..


 

 உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டால், என்ன செய்வது என்று தெரியுமா? பீதியடைய தேவையில்லை. மாறாக, நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.


Tickets for trains lost or torn? How much money may fall, do you know? Recognize quickly before slipping into the pocket-rag

Train Tickets Lost

இந்திய இரயில்வே நாட்டின் உயிர்நாடி என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான பயணிகள் தங்களின் இலக்குகளை அடைவதற்கு இரயிலில் பயணிக்கின்றனர். ரயில்வே மூலம் தினமும் சுமார் 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்திய ரயில்வே நெட்வொர்க் 68 ஆயிரம் கிமீக்கு மேல் உள்ளது.



Tickets for trains lost or torn? How much money may fall, do you know? Recognize quickly before slipping into the pocket-rag

Train Ticket

மேலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களைக் கொண்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தவிர, ரயில்வேயில் பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரயில் பயணிகள் இந்த சில தகவல்களை வைத்துக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Indian Railways

நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது உங்கள் டிக்கெட் தொலைந்துவிட்டால், என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா? அதற்கான பதிலை இங்கு பார்க்கலாம். நீங்கள் ரயிலில் பயணம் செய்து உங்கள் டிக்கெட் தொலைந்துவிட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ரயிலின் TTE-க்கு தெரிவிக்க வேண்டும்.


Passengers

TTE உங்களுக்கு நகல் டிக்கெட்டை வழங்குவார். இந்த டிக்கெட் அசல் டிக்கெட்டைப் போலவே உள்ளது. ஆனால் உண்மையான டிக்கெட்டுகளிலிருந்து வேறுபடுத்துவது எளிது. ஆனால் இந்த டிக்கெட் இலவசம் அல்ல, அதற்கு பதிலாக நீங்கள் இந்திய ரயில்வேக்கு பணம் செலுத்த வேண்டும்.


Travel

நீங்கள் ஸ்லீப்பர் கிளாஸ் அல்லது இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தால், ரூ.50க்கு டூப்ளிகேட் டிக்கெட் கிடைக்கும். நீங்கள் ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு தவிர வேறு எந்த வகுப்பிலும் பயணம் செய்து உங்கள் டிக்கெட் தொலைந்துவிட்டால், அதற்கு நீங்கள் ரூ.100 செலுத்த வேண்டும், அதன் பிறகு TTE உங்களுக்கு நகல் டிக்கெட்டை வழங்குவார்.


TTE

நீங்கள் ரயிலில் பயணம் செய்து, உங்கள் டிக்கெட் கிழிந்திருந்தால், கட்டணத்தில் 25 சதவீதத்திற்கு நகல் டிக்கெட்டைப் பெறலாம். ஆனால் காத்திருப்பு டிக்கெட் இருந்தால், டூப்ளிகேட் டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை என்பதை இங்கே கவனிக்கவும்.


Duplicate tickets

இது குறித்து ரயிலின் டிடிஇயிடம் தெரிவிக்கலாம். ஏனெனில், காத்திருப்பு டிக்கெட்டில் இடம் கிடைக்காது. அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் ரயில் பெட்டியில் மட்டுமே பயணிக்க முடியும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations