(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

கோவை வழியாக செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம்!


 கோவை வழியாக செல்லும் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றம்!

கோவை: பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை வழியாக செல்லும் பல்வேறு ரயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


A. பின்வரும் ரயில் சேவைகள் இருகூர் - போதனூர் வழியாக திருப்பி விடப்படும்



1. 05.06.2024 அன்று கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்ட ரயில் எண்.22504 திப்ருகார் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ், இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.


இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில் நின்று செல்லாது. அதற்கு பதிலாக போத்தனூர் ஜங்சனில் ரயில் நிறுத்தப்படும்.


2. ரயில் எண்.16159 சென்னை எழும்பூர் - மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.  இதன் விளைவாக, இந்த ரயில் கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் ஜங்சனில்  நிற்காது.


3. ரயில் எண்.12626 புது தில்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.  இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்  நிற்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ஜங்சனில் ரயில் நிறுத்தப்படும்.


4. ரயில் எண்.12677 KSR பெங்களூரு - எர்ணாகுளம் Jn இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 அன்று இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.  இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்  நிற்காமல் போத்தனூர் ஜங்சனில் நிறுத்தப்படும்.


5. ரயில் எண்.22642 ஷாலிமார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், 06.06.2024 அன்று இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.  இந்த ரயிலும் போத்தனூர் ஜங்சனில்  நிறுத்தப்படும்.

 



6. ரயில் எண்.16318 ஸ்ரீமாதா வைஷ்ணோ தேவி கத்ரா - கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ், 06.06.2024 அன்று இருகூர் - போதனூர் வழியாக இயக்கப்படும்.  இதனால், இந்த ரயில் கோயம்புத்தூர் ஜங்சனில்  நிறுத்தப்படாமல் போத்தனூர் ஜங்சனில் நிறுத்தப்படும்.


B. பின்வரும் ரயில் சேவைகள் போத்தனூர் - இருகூர் வழியாக திருப்பி விடப்படும்


1. ரயில் எண்.13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் வழியாக இயக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ரயில் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.  போத்தனூர் ஜங்சனில் ரயில் நிறுத்தம் வழங்கப்படும்.


2. 05.06.2024 & 06.06.2024 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர் வழியாக இயக்கப்படும் ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜே.என் - கே.எஸ்.ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும்.  


இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations