(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

kisan credit card: விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம்... எப்படி தெரியுமா?!

 


இ.நிவேதா

இவர்கள் தங்கள் ஆதார், பான் கார்டு, முகவரி ஆதாரம், நிலத்தின் விவரங்கள் மற்றும் புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை, கூட்டுறவு வங்கி, பொதுத்துறை வங்கி அல்லது இந்தியாவின் எந்தவொரு பிராந்திய கிராமப்புற வங்கிகளிலும் சென்று விண்ணப்பிக்கலாம்.

Published: 29th May, 2024 at 18:14 PM

Updated: 5 days ago

விவசாயி

விவசாயி 

*கிசான் கிரெடிட் கார்டு திட்டம் (Kisan Credit Card Scheme)



விவசாய வேலைகள் நிதி பற்றாக்குறையால் தடைப்படக் கூடாது என்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதே கிசான் கிரெடிட் கார்டு திட்டம். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள் மூலமாக தங்களுக்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், விவசாய இடுபொருட்கள் என அனைத்தையும் நடவு மற்றும் அறுவடைக் காலங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.


தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் கீழ் தொடங்கப்பட்ட இந்த திட்டம் விவசாயிகளின் கடன் தேவையை நிறைவு செய்கிறது. அதாவது 3 சதவிகித மானியத்தில் 3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள், எவ்வித இடையூறும் இன்றி தங்கள் வேளாண் பணிகளை இதன் மூலம் சிறப்பாகச் செய்ய முடியும்.


farming

farming

*விண்ணப்பிக்கும் முறை


குத்தகை விவசாயிகள், வாய்வழி குத்தகைதாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் என அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதி உடையவர்கள்.


ஆதார், பான் கார்டு, முகவரி ஆதாரம், நிலத்தின் விவரங்கள் மற்றும் புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை, கூட்டுறவு வங்கி, பொதுத்துறை வங்கி அல்லது இந்தியாவின் எந்தவொரு பிராந்திய கிராமப்புற வங்கிகளிலும் சென்று விண்ணப்பிக்கலாம்.


ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர், விவசாயிகளின் வருமானத்துக்கு ஏற்ப வங்கிகள் கடனை அனுமதிக்கும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் வரம்பு தொகையானது 25,000 ரூபாயிலிருந்து தொடங்குகிறது.


வருடத்திற்கு 7 சதவிகித வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகளுக்குக் கடன் வழங்கப்படும். இந்த கடனை ஒரு வருடத்திற்குள்ளாகவே விவசாயிகள் திருப்பி செலுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு 3 சதவிகித வட்டியானது தள்ளுபடி செய்யப்படும். வெறும் 4 சதவிகித வட்டியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations