Advertisement

Responsive Advertisement

யார் என்றே தெரியாதவர்கள் உங்களை வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்கிறார்களா.. இந்த செட்டிங்கை மாத்துங்க! |


 சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில், பலரும் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற ஆப்-களை அதிகம் பயன்படுத்துகிறோம். சில நேரங்களில் அவை நமக்கு உதவிகரமானதாக இருந்தாலும், பல நேரங்களில் தேவையற்ற சவால்களையும் சந்திக்க நேரிடலாம். அந்த வகையில் வாட்ஸ்அப் குரூப்பில், உங்களை பிறர் இணைப்பது தொல்லையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு. இதன் மூலம், உங்களை யார் யாரெல்லாம் வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.



வாட்ஸ் அப் குரூப்பில் யார் உங்களை இணைக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யும் வகையில் செட்டிங்ஸ் (Settings) அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கமாக பார்ப்போம்.




ஆண்ட்ராய்டு யூஸர்கள்:

ஸ்டெப் 1: உங்கள் குரூப் செட்டிங்கை மாற்றுவதற்கு வாட்ஸ் அப்பில் உள்ள செட்டிங்ஸ்-க்கு செல்லவும்.


ஸ்டெப் 2: "Account" என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் "Privacy" என்பதைக் கிளிக் செய்யவும்.


ஸ்டெப் 3: "Groups" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களுக்கு மூன்று விருப்பங்கள் காண்பிக்கப்படும்


Everyone: Everyone என்பதைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தீர்கள் என்றால், உங்களை யார் வேண்டுமானாலும் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய வைக்கலாம்.


My Contacts: உங்கள் கான்டெக்ட்டில் உள்ள நபர்கள் மட்டுமே உங்களை வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க முடியும்.


My Contacts Except: "My Contacts Except" என்பதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கான்டெக்ட்கள் (தொடர்புகள்) மட்டுமே உங்களை வேறு ஒரு குரூப்புகளில் சேர்க்க முடியும்.




மேல் கண்ட மூன்று விருப்பங்களில் எதை வேண்டுமானாலும், நீங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என்னை யார் என்று தெரியாதவர்கள் குரூப்புகளில் சேர்த்து விடுகின்றனர் என்றும் புலம்பும் நபர்களுக்கு.. My Contacts மற்றும் My Contacts Except ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.


ஐபோன் யூஸர்கள்: iphone யூஸர்களாக இருந்தால் நீங்களும் ஆண்ட்ராய்டு யூசர்-களை போலவே மேல்கண்ட ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றினால் உங்களுடைய குரூப் செட்டிங்கை நீங்களே மாற்றி அமைக்கலாம்.


வாட்ஸ் அப் தற்போது குரூப்புகளுக்கு நிறைய வசதியை வழங்கி வருகிறது. அதன் படி ஒரு குரூப்பை தொடங்கும் "Admin" யார் அந்த குரூப்பில் மெசேஜ் செய்ய வேண்டும். யார் மற்ற நபர்களை குரூப்புகளில் இணைக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் வசதியை வழங்குகிறது. உங்களுக்கு ஏதேனும் குரூப்கள் பயனில்லாமல் இருப்பது போல் தோன்றினால், உடனடியாக நீங்கள் அதை விட்டு "Exit Group" என்பதைப் பயன்படுத்தி வெளியேறலாம்.


More From GoodReturns

 அதிக ரிட்டன்ஸ்.. அப்பாவி மக்களை குறிவைத்து நடக்கும் வாட்ஸ்அப் மோசடி.. மக்களே உஷார்!



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations