Advertisement

Responsive Advertisement

NPS Withdrawal Rules: எந்தெந்த காரணங்களுக்காக இடையே பணம் எடுக்க முடியும்?

 



Guest Contributor, சி.சரவணன் & அ.பாலாஜி

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்பவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற சிறந்த ஓய்வுக் கால திட்டமாக என்.பி.எஸ் (NPS - National Pension System) உள்ளது.

Published: 6th Jun, 2024 at 18:21 PM

Updated: 1 day ago

முதலீடு & குடும்ப பென்ஷன் |NPS - National Pension System

முதலீடு & குடும்ப பென்ஷன் |NPS - National Pension System 

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், சுய தொழில் செய்பவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற சிறந்த ஓய்வுக் கால திட்டமாக (Retirement Plan) என்.பி.எஸ் (NPS - National Pension System) உள்ளது.


என்.பி.எஸ் லாபங்கள்..!


என்.பி.எஸ், மத்திய அரசின் திட்டம் ஆகும். இதில், திட்டத்தின் வகைக்கு ஏற்ப பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பணம், நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.


மேலும் ஆட்டோ சாய்ஸ் என்கிற ஆப்ஷனில் சந்தாதாரரின் வயதுக்கு ஏற்ப பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையில் கலந்து முதலீடு செய்யப்படுகிறது. வயது அதிகரிக்க அதிகரிக்க பங்குச் சந்தை முதலீடு குறைக்கப்படும். மேலும், பங்குச் சந்தையில் மட்டும் முதலீடு செய்யும் ஆப்ஷன், கடன் சந்தையில் மட்டுமே முதலீடு செய்யும் ஆப்ஷன் ஆகியவையும் உள்ளன.


பணியாளர் மற்றும் பொதுமக்கள் அவர்களின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஆப்ஷன்களை தேர்வு செய்துக் கொள்ளலாம்.



NPS

NPS

NPS-ல் பகுதி பணம் எடுக்கலாம்..!

இது பணி ஓய்வுக் காலத் தேவைக்கான முதலீடு ஆகும். ஆனாலும், இடையில் சில தேவைகளுக்கு மட்டும் பணம் எடுத்துக் கொள்ள முடியும். இதை பார்சியல் வித்டிராயல் (Partial Withdrawal) என்கிறார்கள்.


என்.பி.எஸ் முதலீட்டை ஆரம்பித்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் இப்படி பகுதி பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதுவும் தனிநபர் அவரின் பங்களிப்பில் 25 சதவிகிதம் வரைக்கும்தான் எடுக்க முடியும். நிறுவனம் செலுத்தும் தொகை மற்றும் அதற்கு கிடைக்கும் வட்டியிலிருந்து எந்தப் பணத்தையும் இடையில் எடுக்க முடியாது.


அதுவும் சில குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே பகுதி பணம் எடுக்க முடியும் என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Pension Fund Regulatory and Development Authority - PFRDA) விதிமுறை ஆகும். இந்த விதிமுறைபடி, என்.பி.எஸ் சந்தாதாரர் அவரின் வாழ்நாளில் மூன்று முறைதான் இப்படி பகுதி பணத்தை எடுக்க முடியும்.


மேலும், பகுதியளவு பணத்தை ஒரு முறை எடுத்தப் பிறகு, அந்தத் தேதிக்குப் பிறகு அதிகரிக்கும் சந்தாதாரின் பங்களிப்பின் பகுதி மட்டுமே அடுத்த முறை பகுதி பணம் எடுக்க பரிசீலிக்கப்படும். அந்த வகையில் நினைத்த நேரத்தில் எல்லாம் நினைத்த தொகையை பகுதி பணமாக எடுக்க முடியாது.


உயர்கல்வி

NPS-ல் பகுதி பணம் யாருக்கு கிடைக்கும்?

என்.பி.எஸ் முதலீட்டில், சந்தாதாரரின் பங்களிப்பிலிருந்து கீழ்க்கண்ட ஏழு காரணங்களுக்காக மட்டுமே பகுதி பணத்தை எடுக்க முடியும்.


1. குழந்தைகளின் உயர்கல்வி கட்டணம்:

பிள்ளைகளின் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்பு உள்ளிட்ட அனைத்து மேற்படிப்புக்கான கட்டணங்களுக்காக (Higher Education Fees) என்.பி.எஸ் பகுதி பணத்தை எடுக்க முடியும். மேலும். சட்டப்படி தத்து எடுக்கப்பட்ட (Legally adopted) பிள்ளைகளின் உயர்கல்வி செலவுகளுக்கும் இப்படி பணம் எடுக்கலாம்.


Advertising

Advertising

2. குழந்தைகளின் திருமணச் செலவுகள்:

என்.பி.எஸ் சந்தாதாரர் அவரின் பிள்ளைகளின் கல்யாணச் செலவுகளுக்கு தேவையான தொகையை சமாளிக்க இப்படி பகுதி பணம் எடுக்க முடியும். மேலும். சட்டப்படி தத்து எடுக்கப்பட்ட பிள்ளைகளின் திருமணச் செலவுகளுக்கும் என்.பி.எஸ் முதலீட்டிலிருந்து பகுதி பணம் எடுக்கலாம்.


சொந்த வீடு

3. சொந்த வீட்டு வசதி:

சொந்த வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொள்ள என்.பி.எஸ். முதலீட்டிலிருந்து பகுதி பணம் எடுத்துக் கொள்ளலாம்.


குடியிருப்பு வீடு கட்ட, வீடு கட்ட, அடுக்கு மாடி வாங்க இப்படி பகுதி பணம் எடுக்கலாம். இந்தக் காரணத்துக்காகதான் பெரும்பாலோர் என்.பி.எஸ்-லிருந்து பணம் எடுப்பதாக தகவல்.


4 குறிப்பிட்ட தீவிர நோய்களுக்கான சிகிச்சை :

புற்றுநோய், சிறுநீரகம் செயல் இழப்பு, விபத்து மூலமான அதிக பாதிப்பு உள்ளிட்ட 14 பாதிப்புகளுக்கு பகுதி பணம் எடுக்க முடியும்


5. இயலாமை செலவுகள்:

உடல் நலப் பாதிப்பால் வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும் நிலையில் மருத்துவச் செலவு மற்றும் வாழ்க்கை செலவுகளை ஈடு கட்ட பகுதி பணத்தை எடுக்கலாம்.


6. திறன் மேம்பாடு மற்றும் சுய வேலை வாய்ப்பு:

பணிக்கான திறமையை மேம்படுத்த மற்றும் சுயதொழில் செய்ய தேவையான தொகைக்கு இப்படி பணம் எடுத்துக் கொள்ளலாம்.


கட்டுரையாளர்: உமா மகேஸ்வரன், நிறுவனர், https://silveroakcapital.in/

7 தொழில் தொடங்க..

சொந்த தொழில் தொடங்க அல்லது ஸ்டார்ட் அப் (Start-up) நிறுவனம் தொடங்க என்.பி.எஸ் முதலீட்டிலிருந்து பணம் எடுக்க முடியும்.


இப்படி பெறப்படும் 25 சதவிகித பகுதி பணத்துக்கு வருமான வரி இல்லை.


என்.பி.எஸ் என்பது பணி ஓய்வுக் கால சேமிப்பு என்பதால் அதிலிலிருந்து மிகவும் அவசியத் தேவைக்கு மட்டுமே பகுதி பணத்தை எடுப்பது நல்லது.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations